மூதூர்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்டு வரும் வீட்டின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, வர்த்தகப் பொருளாதாரத்துறைத் தலைவர் கலாநிதி அநுர மார உதுமான்கே, கேணல் விகும் லியனகே உள்ளிட்ட பலர் மூதூரிற்கு விஜயம் செய்திருந்தனர்.
இந்த வீட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளன. மிகவும் வறுமையில் வாழும் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதாக பலர் வாக்குறுதியளித்தனர். இந்த வீட்டை அரசியல்வாதிகள் அமைத்துக்கொடுப்பதாகவும் பலர் நம்பி வருகின்றனர்.
எனினும் அவர்களில் எவரும் முன்வராத நிலையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து வீடொன்றை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![Rizana[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/rizana1.jpg?w=265&h=150)
Leave a comment