நடக்க முடியாத 65வயது முதியவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு செய்த தென் ஆபிரிக்க நீர் முகாமைத்துவ பொறியலாளர் நஸீம் வாஹிட்

nazeer wahid– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: சென் ஜோண் அம்பியூலன்ஸ் தேசமானிய அஹமட் லெப்பை மீராசாகிபின் வேண்டுகோளுக்கிணங்க  தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நீர் முகாமைத்துவ பொறியலாளர் நஸீம் வாஹிட்டின் 14,000 ரூபாய் அனுசரனையில் தனது காலால் நடக்க முடியாத காத்தான்குடி குவைத் சிடடியைச் சேர்ந்த 65வயது முதியவர் முஹம்மட் தம்பிக்கு சக்கர நாற்காலி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட குறித்த சக்கர நாற்காலியை கையளிக்கும் 14-09-2013 கடந்த சனிக்கிழமை காத்தான்குடி முதலாம் குறச்சி ஹூஸைனியா பள்ளிவாயலில் பள்ளிவாயல் பேஷ் இமாம் மற்றும் அதன் நிர்வாகிகள் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன் போது சக்கர நாற்காலி தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நீர் முகாமைத்துவ பொறியலாளர் நஸீம் வாஹிட்டினால் நடக்க முடியாத முதியவர் முஹம்மட் தம்பிக்கு வழங்கிவைக்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நீர் முகாமைத்துவ பொறியலாளர் நஸீம் வாஹிட் தொழில் நிமித்தம் இலங்கைக்கு வந்து காத்தான்குடியில் இருந்த ஒரு வருட காலத்தில் நிறைய வறிய ஏழைகளுக்கு தனது ஸகாத் நிதியில் கல்விக்கும் நோய் நிவாரணிக்கும் பன உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

nazeer wahid

nazeer wahid

Published by

Leave a comment