கிண்ணியா: 2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்திற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்புரைக்கமைவாக இன்று நகரசபை மைதானத்தில் கோலாகலமா இடம்பெற்றது.
கிண்ணியா நகரசபை அணியும், கிண்ணியா தளவைத்தியசாலை அணியும் மோதின. 12 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட குறித்த போட்டியினை கிண்ணியா நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத் ஆரம்பித்து வைக்க நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற கிண்ணியா நகரசபை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டது.
கடும் போராட்ட போட்டியாக இடம்பெற்ற மோதலில் தளவைத்தியசாலை அணியினர் வெற்றிபெற்று கேடயத்தினை தனதாக்கிக் கொண்டனர். இரண்டாமிடம் பெற்ற கிண்ணியா நகரசபை அணித்தலைவருக்கு இரண்டாமிடத்திற்கான கேடயத்தினை கிண்ணியா தளவைத்தியசாலை னுஆழு டொக்டர் சமீம் வழங்கிவைக்க வெற்றி பெற்ற வைத்தியசாலை அணிக்கு கிண்ணியா நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத் கேடயத்தினை வழங்கிவைத்தார்.
இச்சுற்றுப்போட்டியின் போhது நகரசபை செயலாளர், நகரசபை உத்தியோகத்தர்கள,; ஊழியர்கள், வைத்தியசாலை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்களென ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர். உள்ளூராட்சி வாரத்திற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான ஒழுங்குகளை நகரசபை ஊஊ எம்.ஐ.எம்.ஜெம்சித் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது நகரசபை ஏற்பாடு செய்த சுமுக முறையிலான ஊர்வலம் சுத்தமானதும் சுகாதாரமானதுமான எழில்மிகு கிண்ணியாவை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இவ்வூர்வலத்தில் கிண்ணியா நகரசபை உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச செயலகம், சீசீடி, கிண்ணியா வைத்திய சுகாதார அலுவலகம், கிண்ணியா தளவைத்தியசாலை, இது கிண்ணியா பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நகரசபை அதிகாரிகள், உளளூர் அமைப்புக்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஊர்வலத்தை சிறப்பித்தனர்.
கிண்ணியா பொது பூங்காவிற்கு முன்பாக கூடிய ஊர்வலத்தின் இறுதியில் பொது சுகாதார அலுவலக அதிகாரி டொக்டர் றிஸ்வி கழிவுகள் அதன் பயன்பாடு எவ்வாறு அவற்றினை கையாள வேண்டும் என்பதாக விளக்கமளிக்க அதனை தொடர்ந்து சீசீடி சிவா உரையாற்றினார். இறுதியில் கிண்ணியா நகரபிதா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் ‘ நகரசபை எல்லைக்குள் காணப்படும் கழிவுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக மாற்றுவற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு இப்பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





Leave a comment