மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வாழ்வின் எழுச்சி அலுவலகத் தோட்டம்

image_2[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

மண்முனை: மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் பட்டதாரிப் பயிலுனர்களால் மேற் கொள்ளப்படும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலகத் தோட்டத்தில் பயிர் கன்றுகள் நடும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு (16.09.2013) பிரதேச திட்டமிடல் பணிப்பாளர்  சிவராஜா தலைமையில் நடைபெற்றது.

வாழ்வின் எழுச்சித் திட்டம் மூலம் பயனாளிகளின் வாழ்வாதாரங்களை வலுவாக்குவதற்காக வீட்டுத்தோட்டங்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு பட்டதாரிபயிலுனர்கள் முன்னோடியாக மண்முனைவடக்கு பிரதேசசெயலகத்தில் மிளகாய், கத்தரி, தக்காளி,புடோல, கறிமிளகாய் போன்ற பயிர்க்கன்றுகளை நட்டனர்.

மண்முனைவடக்கு பிரதேச அபிவிருத்தித் தலைவவரும் ஐனாதிபதியின் ஆலோசகரும்  கிழக்குமாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் வழி காட்டலின் கீழ் பிரதேசசெயலாளர் கிரிதரனின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத் தோட்டத்திகான முதல் கன்றுகளை முன்னாள் கிழக்கமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சிவராஜா, திவிநெகும இணைப்பாளர் நமசிவாயம் உள்ளிட்டோரும் முதற்கன்றுகளை நட்டி ஆரம்பித்துவைத்தனர்.

image_2[1]

image_4[1]

Published by

Leave a comment