மண்முனைவடக்கு -அறநெறிவகுப்புக்களைநெறிப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம்

image[1]-பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: சைவ சமய அபிவிருத்தியினை   கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் அறநெறிவகுப்புக்களை நெறிப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மண்முனைவடக்கு பிரதேசசெயலாளர்  கிரிதரன் தலைமையில் பிரதேசசெயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மார்க்க கல்வியிரன நெறிப்படுத்தும் பொருட்டு ஒவ்வெரு ஞயிறு, பூரணைவிடு முறைதினங்களில் பிரத்தியேகவகுப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளபோதும் மாணவர்கள் மார்க்ககல்விகளுக்குச் செல்கின்றார்களா? எனவும் அறநெறிவகுப்புக்களின் அபிவிருத்திதொடர்கவும் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.

அறநெறிவகுப்புக்கரள மேற்பார்வைசெய்வதற்காகஅதிகாரிகள் நியமிக்கப்பட்டதுடன் தொடர் நடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டது. முன்னால் கிழக்கமாகாணசபையின் முதலமைச்சர், ஜனாதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன்  பணிப்பிற்கமைய ஏற்பாடு செய்யப்பட்ட இவ்சைவசமய ஒழுங்குபடுத்தல் அறநெறிக் கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கமாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் மாவட்டகலாச்சார அலுவலகர் எழில்வாணி பிரதேச கலாசார உத்தியோகஸ்தர் சதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

image[2]

image[1]

Published by

Leave a comment