பங்களாதேஷ் போர்க் குற்றவாளிக்கு மரணதண்டனை

130917081249_mollah_304x171__nocredit[1]டாக்கா: பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971ல் நடத்திய போரின் போது , ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவர் செய்த மேல் முறையீட்டில், பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

பிப்ரவரியில், சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்று, அப்துல் குவாதர் மொல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

ஒருவருக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் தாஜுல் இஸ்லாம் கூறினார்.

இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அடைய வைப்பதாக அவர் கூறினார்.

முன்பு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்தே பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்று மொல்லாவின் ஆதரவாளர்கள் கூறினர், ஆனால் அவரது எதிர்ப்பாளர்களோ முன்பு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு என்று கூறினர்.

– BBC

Published by

Leave a comment