கிண்ணியா: 2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தினையொட்டி நடைபெற்றுவரும் செயற்பாடுகளில் இலவச மருத்துவ முகாமொன்று கிண்ணியா நகரசபையில் இன்று கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
கிண்ணியா ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களான டொக்டர் எம்.எல். நஸ்மி மற்றும் டொக்டர் திருமதி ரைஸா நஸ்மி கலந்து கொண்டதோடு வருகை தந்தோருக்கு ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதன் போது நகரசபை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் குறித்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு இவ்வாரான இலவச மருத்து முகாம்கள் தொடர்ந்து நகரசபை தலைவர் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




Leave a comment