இங்கிலாந்து, அமெரிக்கா பற்றி பெருமை பேசுபவர்கள் நாட்டை நேசிக்க முடியாது

mahindaஆனமடுவ: நாட்டை அன்பு செய்யாதவர்களை மக்கள் ஒருபோதும் நாட்டின் தலைவர்களாக்க விரும்ப மாட்டார்கள் என்றும் நாட்டை நேசிப்ப வர்களாலேயே உலகை வெல்ல முடியும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஆனமடுவ தொகுதியில் மஹிந்தோதய பாடசாலைக் கட்டிடத்தை திறந்து வைத்து மக் கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அன்பையும் கருணையையும் உலகிற்கு எடுத்துக்கூறிய வரலாற்றைக் கொண்ட நாடு இது என தெரிவித்தார்.

இங்கிலாந்து பற்றியும் அமெரிக்கா பற்றியும், பெரு மையாக பேசுபவர்களால் நாட்டை நேசிக்க முடியாது. நாட்டை நேசிப்பவர்களால் தான் பெரியோராகவும் தலை வராகவும் முன்னேற முடியும், கிராமங்களையும் உலகத்தையும் வெல்ல முடியுமெனவும் ஜனாதி பதி தெரிவித்தார்.

எம்மைக் கொல்ல வந்தவர்க ளுக்கும் உணவளித்து விடுதலை வழங்கியவர்கள் நாம். ஒருபோதும் எந்த நாட்டினதும் வளங்களை உரிமையையும் அபகரித்த வரலாறு எமக்குக் கிடையாது எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள வில்பொத அநுர மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

‘மஹிந்தோதய’ பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சர்கள், பிரியங்கர ஜயரத்ன, ஏ. எச். எம். பெளஸி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:- தலைவர்களாக விரும்பும் எவரும் தமது நாட்டைப் பற்றி பெருமை பாராட்ட வேண்டும். நாட்டை அன்பு செய்யாத ஒருவரை மக்கள் நாட்டின் தலைவராக்க விரும்பமாட்டார்கள். எமது தாய் தந்தையர்களை, கவனிக்காமல் மனிதம், கருணை பற்றி பேச முடியாது. பிள்ளைகள் பிறந்த நாட்டின் மீது பெருமைகொள்வதுடன் நாட்டை நேசிப்பது அவசியம். அவ்வாறு செயற்படுபவர்களது வாழ்வில் என்றும் எதிலும் தோல்வியில்லை.

நாம் உலகிற்கு அன்பின் மகத்துவத்தைக் காட்டியவர்கள். எந்த நாட்டினதும், எவரதும் வளங்களை உரிமைகளை நாம் அபகரித்ததாக எந்த வரலாற்றிலும் கிடையாது. மற்றவர்களைத் துன்புறுத்திய வரலாறு எமக்குக் கிடையாது. எமது நாட்டை ஆண்ட அரசர்கள் வேறு மதங்கள் இந்த நாட்டிற்கு வந்தபோது அந்த மதத்தினர்களைப் பாதுகாத்தனர். அவர்களை அன்பு செய்தனர். அதுவே எமது பரம்பரையின் பண்பும் நட்பும். எம்மைத் தாக்கவந்தவர்களையும் ஆதரித்தவர்கள் நாம்.

பல்லாண்டுகளுக்கு முன்புள்ள வரலாறுகளில் எமது முன்னோர்கள் நாட்டின் மீதும் அயலவர்கள் மீதும் காட்டிய அக்கறையும் நேசமும் கூறப்படுகிறது. நாம் எதிரிகளைக் கவனித்த விதம் அதில் தெரிவிக்கப்படுகிறது.

அதனால் தான் 12,000ற்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் எம்மிடம் சரணடைந்தபோது எமது பாதுகாப்புப் படையினர் தம்மிடமிருந்த தண்ணீர்ப் போத்தலையும் உணவுப் பொதியையும் அவர்களுக்கு வழங்கி உபசரித்தனர். அத்தகைய கருணை படைத்த படையினர் எம்மிடமுள்ளனர். இறுதி மனிதாபிமான நடவடிக்கையின்போது ஒரு பக்கம் படையினர் மீது தாக்குதல் நடந்தபோதும் மறுபக்கம் படையினரின் இந்த நேசம் வெளிப்பட்டது. அவ்வாறு சரணடைந்த புலிகள் அனைவரையும் நாம் தற்போது விடுதலை செய்துவிட்டோம்.

எம்மைக் கொல்ல வந்தவர்களையும் கருணை காட்டி உணவு வழங்கி விடுதலை பெற்றுக்கொடுத்தவர்கள் நாம். இது இன்று நேற்றல்ல. எமது மூதாதையர் பரம்பரையிலிருந்து தொடர்ந்து வெளிப்பட்ட பண்புகள் இவை.

உலகை வெல்வதற்கு நாம் வெற்றிகொண்ட அனைத்தையும் பாதுகாத்து முன்செல்ல வேண்டுமே தவிர அவற்றை அழித்துச் செல்ல முடியாது. நாம் எதிர்கால சந்ததியினரான எமது பிள்ளைகளுக்கு நாம் அனைத்தையும் பெற்றுக்கொடுத்து வருகிறோம். முதலாம் வகுப்பு இலவச பாட புத்தகத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை நாம் அனைத்தையும் மாணவர்களுக்கு வழங்குகின்றேம்.

இலவசமாகக் கல்வியைப் பெற்றுக்கொடுத்து பிள்ளைகளை முன்னேற்றுவதற்கு நாம் பாடுபடுகின்றோம். பெற்றோர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். பிள்ளைகளே நமது செல்வம், அந்த செல்வங்களைப் பாதுகாத்து முன்னேற்ற வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

– தினகரன்

Published by

Leave a comment