லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 2022ம் ஆண்டு கட்டாரில் நடாத்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) உத்தியோகபூர்வமாக சம்மதமளித்திருந்தது.
எனினும் கட்டாரின் ‘பீபா 2022’ உலகக் கிண்ணத்தை நடாத்தும் கனவில் கைவைத்திருக்கின்றது மேலத்தேய ஊடகங்களும், சில கால்பந்தாட்ட வீரர்களும்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி சேவை ஒன்று முதன் முதலில் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.
‘ஓர் சிரிய நாட்டில், உதைப்பந்தாட்டத்தில் உலகளவில் பிரபல்யமல்லாத ஓர் நாட்டில் ஓர் உலகக் கிண்ணத்தை நடாத்துவதா? எனவும், எண்ணெய்யை வைத்து செல்வந்த நாடாக திகழும் கட்டார் வேறு எந்த வகையிலும் உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்துவதற்கு அருகதையற்றது’ எனவும் விமர்சித்திருக்கின்றது.
ஐரோப்பாவின் சில உதைப்பந்தாட்ட வீரர்களும், விமர்சகர்களும் மென்மேலும் ‘பீபா 2022’ உலகக் கிண்ணத்தை விமர்சித்திருக்கின்றனர்.

‘கட்டாரின் ஓர் வெயில் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஓர் சிரேஷ்ட, அதுவும் உலகக் கிண்ணப்போட்டியில் 40-50 செல்சியஸ் உஷ்ணம் நிலவும் பாலைவனத்தில், ஐரோப்பிய வீரர்கள் தாகத்தால் உயிரிழந்து விடுவார்கள்’ எனவும், ‘அது மாத்திரமன்றி பாரிய நோய்களுக்கும் தளர்வுகளுக்கும் எதிர்கொள்ள நேரிடும்’ எனவும் மேலும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த அழுத்தங்கள் காரணமாக ‘பீபா’ தங்களது முடிவை அறிவிக்க வேண்டும் என மேற்படி அதிகாரிகளும், ஊடகங்களும், விமர்சகர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘பீபா’ இவ்வாரத்தில் 2022 உலகக்கிண்ணம் எந்த நாட்டில் இடம்பெறும் என மீண்டும் அறிவிக்கும் என பீபாவின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கட்டார், குறித்த உலகக் கிண்ணப்போட்டியை குளிர்காலத்தில் மாற்றினால் ஒருவேளை மீளாய்வு செய்வதற்கு முயற்சி செய்யலாம் என பீபா கடந்த வாரம் அறிவித்திருந்தது.
2018 மற்றும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான பொக்ஸ் (FOX) தெரிவிக்கையில்,
‘தாங்கள் 630 பில்லியன் டொலர்களை இரு உலகக் கிண்ணத்தை ஒளிபரப்புவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். இந்த ஒப்பந்தங்கள் ‘கோடைகால’ (Summer Season) ஒப்பந்தங்களே என குறித்த ஒளிபரப்பு சேவை மேலும் ஊர்ஜிதப்படுத்தி இருக்கின்றது.
உலகக் கிண்ணப்போட்டிகள் ஓர் நாட்டின் கோடைகாலத்தைக் கருத்திற்கொண்டே நடாத்தப்பட வேண்டும். மைதானத்திற்குள் இயற்கைக்கு மாறாக குளிர்காலங்களில் வெப்பங்களை ஏற்படுத்துவதோ (Heaters), அல்லது வெயில் காலங்களில் குளிரூட்டிகளை (A/C) இயக்குவதோ விதியல்ல.
எனவே, கோடைகால உலகக் கிண்த்தையே உலக மக்கள் விரும்புகின்றனர். எனினும் கட்டாரின் கோடைகாலம் ஆபத்தானது என விமர்சித்திருக்கும் ஐரோப்பிய விமர்சகர்கள், குளிர் கால உலகக் கிண்ணத்தை கட்டார் ஏற்பாடு செய்யட்டும் என சந்தர்ப்பம் வழங்கி இருக்கின்றனர்.
கோடைகால உலகக் கிண்ணத்துக்கே பீபாவிடம் அதிவிலைகோரி (Bid) பல நாடுகள் போட்டி போட்டு பேரம் பேசுகின்றன. இந்த வகையில், கோடைகால உலகக் கிண்ணத்தை கட்டாரிடமிருந்து பறித்தெடுத்து நடாத்த அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான்-கொரியா ஆகிய நாடுகள் அதிகளவில் பணத்தை வாரி இறைத்து பீபா-2022 யைக் கைப்பற்ற முன்னணியில் காத்திருக்கின்றன.

கட்டார் உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண சம்மேளனத்தின் உயர் அதிகாரியான ஹஸன் அப்துல்லாஹ் அல் தவாதி, தனது அதிதிருப்தியை தற்பொழுது வெளியிட்டிருக்கின்றார்.
‘பீபா திட்டமிட்டே எங்களுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தை நடாத்த அனுமதி அளித்திருந்தது. நாங்கள் அதற்கான ஆயத்தங்களைத் துரிதமாக செய்துவரும் இந்நிலையில், இவ்வாறான ஓர் அதிதிருப்தியை தெரிவித்திருப்பதில் தான் வருந்துவதாகவும், எவ்விதத்திலும் நியாமற்ற கோரிக்கை’ எனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
தென் அமெரிக்கா கண்டத்தில் அங்கத்துவமிக்க முன்னணி உதைப்பந்தாட்ட நாடுகளான மெக்ஸிகோ, ஆர்ஜன்டீனா, பிரேசில் ஆகிய நாடகள் குறித்த விடயம் பற்றி எக்கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில், இந்நாடுகளில் சராசரி வெப்பநிலை 30-35 செல்சியஸ் என்பதால், வெப்பம் இந்நாட்டு வீரர்களுக்கு தடையல்ல.
ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா வீரர்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். வெப்பத்தின் காரணமாக ஐரோப்பா நாடுகள் முதற்சுற்றிலேயே வெளியேறிவிடும் என்ற பயம் குறித்த நாட்டு வீரர்களிடம் இருக்கின்றது.
![qatar-2022-worldcup-logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/qatar-2022-worldcup-logo1.jpg?w=218&h=300)
கட்டார் என்ன சொல்லப்போகிறது? குளிர் காலத்தில் போட்டியை நடாத்தினால் மக்களின் அதிருப்தியில் உலகக் கிண்ணம் சோபிக்காமல் போய்விடும்.
ஒக்டோபர் 3-4ம் திகதிகளில் பீபாவின் அதி உயர்மட்ட குழுக்கூட்டம் இடம்பெற இருக்கின்றது. இக்கூட்டத்தில் குறித்த விடயமாக அலசப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
கட்டார் சந்தர்ப்பத்தை இழக்குமிடத்து, வாக்களிப்பு இடம்பெற்று, அதிக விலையில் கேள்வியில் இருக்கும் ஏதாவதொரு நாடு தெரிவு செய்யப்படும். ஒன்றில் அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவாக இருக்கலாம்! MJ
![qatar-2022-worldcup-logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/qatar-2022-worldcup-logo1.jpg?w=65&h=90)
Leave a comment