கிண்ணியா நகரசபை ஏற்பாட்டில் உள்ளூராட்சி வார விளிப்புணர்வு ஊர்வலம்

kinniya (4)– ரைஸ்

கிண்ணியா: 2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகளாக ஒருவாரகால நிகழ்வுகள் சகல உள்ளூராட்சி சபைகளிலும் நடைபெற்று வரும் நிலையில் கிண்ணியா நகரசபையிலும் அதற்கான நிகழ்வுகள் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நகரசபை ஏற்பாடு செய்த சுமுக முறையிலான ஊர்வலம் சுத்தமானதும் சுகாதாரமானதுமான எழில்மிகு கிண்ணியாவை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இவ்வூர்வலத்தில் கிண்ணியா நகரசபை உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச செயலகம், சீசீடி, கிண்ணியா வைத்திய சுகாதார அலுவலகம், கிண்ணியா தளவைத்தியசாலை,  இது கிண்ணியா பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நகரசபை அதிகாரிகள், உளளூர் அமைப்புக்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஊர்வலத்தை சிறப்பித்தனர்.

கிண்ணியா பொது பூங்காவிற்கு முன்பாக கூடிய ஊர்;வலத்தின் இறுதியில் பொது சுகாதார அலுவலக அதிகாரி டொக்டர் றிஸ்வி கழிவுகள் அதன் பயன்பாடு எவ்வாறு அவற்றினை கையாள வேண்டும் என்பதாக விளக்கமளிக்க அதனை தொடர்ந்து சீசீடி சிவா உரையாற்றினார். இறுதியில் கிண்ணியா நகரபிதா   நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் ‘ நகரசபை எல்லைக்குள் காணப்படும் கழிவுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக மாற்றுவற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு இப்பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

kinniya
kinniya (2)
kinniya (3)

kinniya (4)

Published by

Leave a comment