அன்புத் தலைவன்
நீங்கள் ஐயா
அந்ததரத்தில் அஷ் ஷஹீதாகி
போனீர் ஐயா
ஆண்டுகள் பல
மாண்டதய்யா
அரசியல் அனாதைகள்
ஆணோமையா …
நீர் வைத்த மரம் ஐயா
இன்று
நீர் இன்றி
நிறம் மாறி போனதையா …
தன்னந்த்தனி காட்டுராஜா
நீங்கலையா
தந்த்திரமாய் ஓர் எந்திரமாய்
அரசாண்டு போனீர் ஐயா
மதவாதம்
தாண்டவம் ஆடுதையா
இங்கே
இனவாதமும்
பல் இளித்து பார்க்குதையா …
வாய்ச் சொல்லில் மட்டும்
இல்லை ஐயா
நீங்கள் செயல் வீரனாய்
வாழ்ந்தீர் ஐயா
பொய்யா பொய்யா இங்கே
பல பேர் ஐயா
பம்மாத்து அரசியல்
பண்ணுகிறார்கள் மெய்யா
மெய்யா மெய்யா
உனைப்போல் ஓர் தலைவன்
எமக்கு கிடைப்பது எப்போதையா ?
இலங்கை அரசியல் வரலாற்றில்
தன்னிகரில்லா தலைவன்
முஸ்லிம்களின்
முடிசூடா மன்னன்
மர்ஹும் எம் . எச் .எம் அஷ்ரப் அவர்களின்
நினைவாக

Leave a comment