இறுதிப் போட்டியில் ஆர். சி. சி. அணி சம்பியண்

DSC_0055விசேட செய்தியாளர் CMA

காத்தான்குடி: காத்தான்குடி ரிவர் கிரிகெட் கிளப் (RCC) ஏற்பாடு செய்த சினேகாபூர்வ மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டித் தொடர் ஒன்று கடந்த 25.08.2013 அன்று அல் ஹிரா மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

காத்தான்குடி ஹுசைனியா, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி குபா, ரிவர் கிரிகெட் கிளப் (RCC) ஆகிய நான்கு அணிகள் பங்கு பெற்ற இந்தப் போட்டித் தொடர் அணிக்கு பத்து ஓவர்கள் மட்டுப் படுத்தப்பட்ட போட்டிகளாக அமைந்தன.

இறுதிப் போட்டியில் காத்தான்குடி ஹுசைனியா அணியும் காத்தான்குடி ரிவர் கிரிகெட் கிளப் (RCC) அணியும் ஒன்றையொன்று எதிர்த்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹுசைனியா அணி தமது பத்து ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து எண்பத்தொன்பது (89) ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரிவர் கிரிகெட் கிளப் (RCC) அணி எட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை அடைந்து சம்பியண் கிண்ணத்தையும் கைப்பற்றியது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment