கிளிநொச்சி: யாழ்.மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் எனக்கு அழுத்தங்களைதந்து கொண்டேயிருப்பார்கள் அதன்விளைவாகவே இப்பகுதி அபிவிருத்திகளை நாம் துரிதப்படுத்திவருகின்றோம் என இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அதிமேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் புகையிரத சேவையினை ஆரம்பித்துவைத்தபின் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு முதன்மைவிருந்தினர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்குஅவர் மேலும் குறிப்பிடுகையில்.
கடந்த முப்பது ஆண்டுகளாக இப்பகுதிமக்கள் அழிவுகளையும் இழப்புக்களையும் எதிர் கொண்டுவந்தனர் அந்த அழிவுகளையெல்லாம் ஈடுசெய்வதற்காக நாங்கள் திட்டமிட்டு அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் அதன்மூலமாக இப்பகுதியில் பல முக்கியமான முன்னேற்றறங்களை ஏற்படுத்திவருகின்றோம். இப்பகுதியில் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தினை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவரும் அதேவேளை வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு யாழ் கிளிநொச்சி வைத்தியசாலைகள் நவீனவசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் மக்களின் அன்றாட வாழ்வியலை மேம்படுத்துவதற்காக நாம் திட்டமிட்டு செயற்பட்டுவருகின்றோம். ஆனால் கடந்த முப்பது வருடஅழிவு யத்தத்தின் காரணமாக இப்பகுதி மக்கள் பல உயிரிழப்புக்களையும் எதிர்கொண்டுள்ளார்கள் என்பதும் எமக்குத்தெரியும் எனினும் உயிர்இழப்புக்களைத்தவிர ஏனைய அனைத்து இழப்புக்களையும் எம்மால் ஈடுசெய்யமுடியும் அதற்காக நாம் தென்னிலங்கைக்கு கிடைக்கப்பெறும் அனைத்து உதவிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்திவருகின்றோம்
தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். அதன் ஒரு அங்கமாகவே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள புகையிரதப் போக்குவரத்தின் ஆரம்பமும் அமைகின்றது. இதேவேளை கிளிநொச்சி யாழ் மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் எனக்கு அழுத்தங்களை தந்து கொண்டேயிருப்பார்கள். நடைபெற்றுவரும் துரித அபிவிருத்திக்கு அதுவும் ஒரு முக்கியகாரணம் இவர்வாறு நாம் அபிவித்தியில் தொடர்ந்து ஆர்வம்காட்டிவந்தபோதும் தேர்தல்கள் தொடர்பிலும் நாம் கவனம்செலுத்த தவறியதில்லை. ஜனாதிபதித்தேர்தல் நடத்தப்பட்டது, பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது, பிரதேசசபைத்தேர்தல் நடத்தப்பட்டது. இப்போது மாகாணசபைத்தேர்தலும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இங்குமேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் அனைத்தையும் ஏதோ ஒரு வெளிநாட்டவர் செய்வதாக சிலர் குறிப்பிட்டுவருகின்றார்கள். இதேவேளை இந்த அரசாங்கம் சீனா ஆசியா இந்தியா ஆசிய அபிவிருத்திவங்கி உலக வங்கி ஆகியவற்றுக்கு கடன்பட்ட கடனாளிகள் என்றும் எமது எதிர்த்தரப்பினர் குறிப்பிடுகின்றனர் இருப்பினும் கடன்பட்டேனும் எமது மக்களின் வாழ்வுக்கான அபிவிருத்தியை நாம் முன்னெடுப்போம். இதேவேளை மக்கள்மத்தியில் பிரச்சினைகளும் தேவைகளும் மிகஅதிகமாகவே இருக்கின்றன இப்பகுதியிலும் சரி தென்னிலங்கையிலும் சரி காணிப்பிரச்சினைகள் வீடில்லாப்பிச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன அவற்றுக்கு நாம் படிப்படியாக தீர்வுகளை பெற்றுக்கொடுத்துவருகின்றோம்.
அதற்கு மக்களின் ஆதரவு தொடர்ந்தும் எமக்குத்தேவை இந்தத்தேர்தலிலும் மக்கள் எமக்கு வாக்களித்து மக்கள் எமக்கு பலத்தை தருகின்ற சந்தர்ப்பத்தில் நாம் தொடர்ந்தும் அபிவிருத்திகளை முன்னெடுக்கமுடியும் தவறின் தொடர்ந்தும் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதென்பது கேள்விக்குறியாகவே அமையும். எமக்கு இந்த முழுநாடுமே ஒன்றுதான் ஆகவே இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழவோம் எனஅவர் மேலும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா சுசில்பிறேமஜெயந்த, வெல்கமுவ, வாசுதேவ நாணயக்கார, ரெஜினோல்ட் கூரே பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் கிழக்குமாகாண முதலமைச்சர், ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதேசசபையின் உறுப்பினர்கள் மதகுருக்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் சுமார் எட்டாயிரத்திற்கும் மே;றபட்ட மக்களும் கலந்துகொண்டனர். வேட்பாளர்களுக்கு தமது ஆதரவை




Leave a comment