பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் காங்கேயனோடை பிரதான வீதி சாலையோர மரம் நடுகை திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு

kankayanodai– பழுளுல்லாஹ் பர்ஹான்

காங்கேயனோடை: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் காங்கேயனோடை பிரதான வீதி சாலையோர மரம் நடுகை திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு 13-09-2013 இன்று வெள்ளிக்கிழமை காலை காங்கேயனோடை பிரதான வீதி நுழைவாயிலில் இடம்பெற்றது.

காங்கேயனோடை கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஏ.சி.எம்.தாஹா ஜேபி தலைமையில் இடம்பெற்ற இவ் அங்குராரப்பன நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எப்.எம்.சிப்லி பாரூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காங்கேயனோடை பிரதான வீதி சாலையோர மரம் நடுகை திட்டத்தின் முதலாவது மரத்தை நட்டி வைத்தார்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக இடம்பெற்ற காங்கேயனோடை பிரதான வீதி சாலையோர மரம் நடுகை திட்டத்திற்கான நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீPள் எழுச்சித்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவியாக சுழற்சி கடன் மூலம் பெறப்பட்ட சேவை கட்டணம் மற்றும் அத்திட்டத்தின் மூலம் வாங்கிய போட்டோ கொப்பி இயந்திரம் மூலம் பெறப்பட்ட கட்டணங்கள் மூலம் பெறப்பட்ட நிதிகள் இதற்காக செலவிடப்படுவதாகவும் இத்திட்டத்தில் மொத்தம் 50 ஐம்பது மரங்கள் நடப்படவுள்ளதாக காங்கேயனோடை கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஏ.சி.எம்.தாஹா ஜேபி தெரிவித்தார்.

இவ் அங்குரார்பன நிகழ்வில் காங்கேயனோடை கிராம அபிவிருத்தி சபைத் தலைவர்’ ஏ.எல்.எம். முஜாஹித் , ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் றிபாய் மௌலவி, காங்கேயனோடை அல் அக்ஷா வித்தியாலய அதிபர் அப்பாஸ் நளீமி, ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.எம்.முபாறக், பாலமுனை அலிகார் வித்தியாலய அதிபர ஏ.எச்.ஏ.றஸாக், காங்கேயனோடை இக்றா வித்தியாலய அதிபர் எம்.ஆதம்லெப்பை மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

kankayan

kankayanodai

kankayanodai

Published by

Leave a comment