யாழ் தேவி நாளை முதல் கிளிநொச்சி வரை செல்லும்

Sri_Lankan_train,Northern_Line,Sri_Lanka[1]கொழும்பு: யாழ் தேவி ரயில் சேவை கிளிநொச்சி வரை நீடிக்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த 3 தசாப்தங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளினால் ரயில் போக்குவரத்துச் சேவை முற்றாக தடைப்பட்டிருந்தது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர்   ரயில் பாதைகள் புணரமைக்கப்பட்டு ஓமந்தை வரை வடக்கு ரயில் சேவை நடைபெற்றது. 15ஆம் திகதி முதல் தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி வரை யாழ் தேவி உட்பட 3 ரயில்கள் பயணிக்கவுள்ளன.

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் வடக்கு ரயில் போக்குவரத்து காங்கேசன்துறை வரை நடத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Published by

Leave a comment