காத்தான்குடி: காத்தான்குடி-04 குறிச்சி, காசிம் ஹாஜியார் லேனில் வசிக்கும் றபீக்கா காசிம் முஹம்மட் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடித்தை காத்தான்குடி முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளரும்,சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவருமான இல்மி அஹமட் லெப்பையினால் 13-09-2013 இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவனாக நியமிக்கப்பட்ட இவர் காத்தான்குடி நகர சபையின் ஒய்வுபெற்ற இலிகிதர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply to Aneesa Farook Cancel reply