மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதி, இவரது ஆட்சியை வீழ்த்த வேண்டும், வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரவூப் ஹக்கீம் பேசுவது ஓர் நடிப்பு: ஹிஸ்புல்லாஹ்

hizbullah– உப்புக்குளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார்: மன்னார் மாவட்டத்தை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் என்பதில் எந்தளவும் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ள பொருளாதார பிரதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா, வெற்றி பெருகின்ற அணியுடன் இணைந்து கொள்வோம் என்று அழைப்பும்விடுத்தார்.

மன்னார் உப்புக்குளத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று இரவு இடம் பெற்ற போது பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.நகுசீன் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் மேலும் பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா பேசுகையில் கூறியதாவது-

நான் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல தமிழ், முஸ்லிம் கிராமங்களுக்கு சென்றுவந்துள்ளேன். இன்று மக்களிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இரு வகையான இனவாதப் பிரசாரங்கள் இங்கு இடம் பெறுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களிடம் போய் பள்ளிவாசல்களை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து கொண்டு, ஜனாதிபதியுடன் அமைச்சரவையில் இருந்துவிட்டு, மாலை புத்தளத்தின் கூட்டத்தில் இந்த மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதி, இவரது ஆட்சியை வீழ்த்த வேண்டும், வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பேசுகின்றார். இது அங்கே ஒரு நடிப்பு, இங்கே ஒரு நடிப்பினை ரவூப் ஹக்கீம் செய்கின்றார்.

உதாரணமாக நாங்கள் மரத்துக்கு வாக்களிப்பதன் மூலம் பொதுபாசேனாவை இல்லாமல் ஆக்க முடியும் என்றால் அதற்கு நாம் வாக்களிக்க முடியும். மரத்துக்கு வாக்களிப்பதன் மூலம் வெறும் வெற்றுப் பேச்சுக்களை பேசலாம். வெறும் உணர்ச்சிகரமான பேச்சுக்களை பேசுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற முடியுமா என்றால் அது முடியாது என்ற பதிலை தான் தரும்.எங்களுக்கு தேவை பிரச்சினைகளுக்கான தீர்வேயன்றி உணர்ச்சிகளை ஊட்டுவதல்ல.

நாங்கள் அரசியலை சமூகத்திற்காக செய்ய வேண்டும்.அரசியலுக்காக அரசியல் முடியாது.மேடைகளில் தோன்றி பேசிவிட்டு அதனை செய்யாமல் இருக்க முடியாது.மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.ஒன்று நாங்கள் செய்வதை பேச வேண்டும்.சமூகத்தின் விமோசனத்திற்காக நாங்கள் பேச வேண்டுமே தவிர பொய்யினை பேச கூடாது.

நான் இன்று முசலி பிரதேசத்திற்கு சென்றோம். சன்னார் கிராமத்திற்கு சென்றோம்.அங்கிருந்த மக்கள் என்னிடம் சொன்னார்கள் மாந்தை பிரதேச சபையின் தலைவரிடம் எங்களுக்கு குடிதண்ணீர் வழங்க பவுசர் ஒன்றை பெற்றுத்தாருங்கள் என்று ஆனால் அதனை அவர்களால் வழங்க முடியாது என்று, இது தான் அவர்களது நிலை.கடந்த பிரதேச சபை தேர்தலில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் அதிகாரத்தை 300 வாக்குகளால் நாங்கள் இழக்க நேரிட்டது.எமக்கு கிடைக்க இருந்த சில வாக்குககளை ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் எடுத்தமையினால் எமது சகோதரர் ஒருவர் தலைவராக வரும் சந்தரப்பத்தை இழக்க நேரிட்டது.அதே போன்று 4 பிரதேச சபைகளின் அதிகாரங்களை குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இழக்க நேரிட்டது.

நாங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.எமது மக்களின் விருப்பத்துக்கும், அபிவிருத்திக்கும் எதை செய்யக் கூடியவர்கள் என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.இன்றை வடக்கின் சூழ் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் விரட்டப்பட்டுள்ளது.

இன்றை சூழல் என்பது ஒரு தற்காலிக சமாதானம் ஏற்பட்டுள்ளது.அதனை நிரந்தரமானதாக மாற்றுவது எமது கைகளில் தான் இருக்கின்றது.வடக்குஇகிழக்குக்கு வெளியில் தென்னிலங்கையில் வாழும் எந்த சுதந்திரத்தினையும் அபிவிருத்திகளையும் அனுவிக்கின்றார்களோஇஅதனை இந்த வடமாகாண மக்களும் கிழக்கு மாகாண மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதி்ல் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

எந்த நச்சுக்களை துாவி இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கினார்களோ, ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தார்களோ அவர்களின் பின்னால் செல்ல முடியாது.17 வருடம் ஆட்சியமைக்க முடியாமல் இருந்த சிறிமாவை பிரதமராக, சந்திரிக்காவை ஜனாதிபதியாக ஆக்கியவர்கள் நாங்கள். இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தரக் கூடிதொரு அரசியல் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் பார்க்கின்றோம்.அதனால்அவரோது கைகோர்த்து செல்கின்றோம்.அதே போல் நாங்கள் யாரோடும்இநிரந்தரமான நண்பர்களுமல்லஇநிரந்தரமான எதிரிகளுமல்லா என்பதை சொல்லி வைக்கவிரும்புகின்றோம்.

இந்த சமூகத்தின் பிரச்சினைகளை யார் தீர்ப்பதற்கு முன்வருகின்றார்களோ, அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்பபோம்.எங்களை எவர்கள் இல்லாமல் ஆக்க துடிக்கின்றார்களோ, அவர்களை துாக்கி எரிந்துவிடும் நிலை எமக்கிருக்கின்றது.தனிப்பட்ட சொகுசு வாழ்வுக்காக  எமது சமூகத்தினை ஒரு போதும் அடகு வைத்து அரசியல் லாபம் பெரும் துரோகத்தை செய்ய மாட்டோம் என்றும் பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் உரையாற்றினார்.அமைச்சரின் ஆலோஷகரும், தொழிலதிபருமான எஸ்.கே.பி.அலாவுதீன், வேட்பாளர்கான எம்.அமீ்ன், றிப்கான் பதியுதீன், அலிகான் ஷரீப் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

hizbullah

DSCF0710[1]

Published by

Leave a comment