எங்கள் ஊரு சந்துபொந்தெல்லாம்..
பச்சை என்றும்
பச்சை மஞ்சள் என்றும்
நீளம், சிவப்பு என்று
கலர் கலராய் !
திருவிழா காலத்து
முட்டாசு கடைகள் போல
அழகு அழகாய் …
எனது வீட்டு முச்சந்தி அது
நேற்று
ஒருவன் வந்து
குரங்கு வித்தை காட்டிப் போனான்
நாலைந்து பெருசுகளும்
ஏழெட்டு சிறுசுகளும்
கைகொட்டி போனார்கள்
அதே இடத்தில் இன்று ஒருவன்
செத்த பாம்புகளை ஆட்டுவிக்கிறான்
சில பாம்புகளை
மூக்கில் விட்டு
வாயில் எடுக்கிறான் .
விசில் சத்தம் வானை பிளக்கிறது .
தூரத்தே ஓர் அசரீரி
நாளையும் இத்தெருவில் யாரோ ஒருவன்
யானையை பூனையாய் மாற்ற போவதாய் !
![ELECTION-non-colour[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/election-non-colour1.jpg?w=150&h=141)
Leave a comment