– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான ‘தஹெட்ட கிருல-2013′ தேசத்துக்கு மகுடம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் தேசிய அடையான அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை 11-09-2013 இன்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு தேசிய அடையாள அட்டைக்காக முதன்முறையாக விண்ணப்பித்தல், தேசிய அடையான அட்டையைப் புதிப்பித்தலுக்காக விண்ணப்பித்தல், தொலைந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல், முதியோர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் இங்கு இடம்பெற்றது.
இதன் போது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தலின் போது பொலிஸ் முறைப்பாடு மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்படி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நடமாடும் சேவையில் ஆண்கள்,பெண்கள்,முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Leave a comment