வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
வவுனியா: இந்த நாட்டில் ஏனைய மாகாணங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும், அபிவிருத்திகளும் வடமாகாண மக்களுக்கும் நாம் வழங்கிவருகின்றோம் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடமாகாண சபை தேர்தலின் பின்னர் மாகாண சபைகளின் அதிகாரங்களையும் இந்த மக்கள் அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.
வவுனியாவில் இன்று காலை இடம் பெற்ற வடமாகாண சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.மேலும் ஜனாதிபதி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உரையாற்றினார்.
தொடர்ந்து தமதுரையில் கூறியதாவது –
இன்று வடக்கு மக்கள் ஜனநாயக ரீதியான அனைத்து விடயங்களையும் பெற்றுள்ளனர்.அன்று இந்த மக்களின் நிலை எவ்வாறு இருந்தது.இந்த நாட்டை கூறுபோட்டு இதன் மூலம் மக்களை அடக்கி ஆளலாம் என்று எண்ணிய பிரபாகரானாலேயே அதனை செய்ய முடியாத நிலையினை எமது அரசு ஏற்படுத்தியது.இன்று சில கட்சிகள் அதே பாணியிலான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.அவர்களாலும் இதனை செய்ய முடியாது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெறும் கையோடு வெளியேற்றப்பட்டனர்.சிங்கள மக்களும் அவ்வாறு சென்றனர்.ஜனநாயகத்தை வடக்கில் நிலை நாட்ட முயற்சித்த தமிழ் தலைவர்களையும் இந்த பயங்கரவாதிகள் கொன்றார்கள்.இவ்வாறு இவர்கள் செய்ததனால் நாம் பெரும் சொத்துக்களை இழந்தோம்.
வடக்கில் வாழும் மக்கள் இன்று அச்சமற்ற நிலையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.நாங்கள் தென்னிலங்கைக்கு சென்றால் அஙகுள்ள மக்கள் தமிழ் மொழியினை கற்றுத் தருமாறு கோறுகின்றனர்.அதே போல் கிளிநொச்சிக்கு அண்மையில் நான் சென்ற போது சிங்களத்தை போதிக்க கூடிய ஆசிரியர்களை தமிழ் மாணவர்கள் வேண்டுகின்றனர்.து தான் இந்த நாட்டில் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜக்கியமான நிலையாகும்.
இந்த நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு என்பவைகளை நாங்கள் ஒன்றித்து பாதுகாக்க வேண்டும்.இந்த நாட்டில் வாழும் அணைத்து இனங்களும் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும், கலாசார ரீதியிலான புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர்.வடக்கில் ஜனநாயகம் மதிக்கப்பட்டுள்ளது.மக்களை அதனை அனுபவிக்கின்றார் என்பதை நாங்கள் தெளிவாக ஏற்கனவே கூறிவந்துள்ளோம்.அதனை இந்த மாகாண சபை தேர்தலை நடத்துவதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளோம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
Leave a comment