டெல்லி மாணவி பலாத்கார வழக்கு.. 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! இன்று தண்டனை அறிவிப்பு!!

delhi– OiT

 இதில் ஒருவன் மைனர். இவனுக்கு அண்மையில்தான் 3 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 5 பேரில் ஒருவன் டெல்லி சிறையில் இருந்த போதே தற்கொலை செய்து கொண்டான். 4 குற்றவாளிகள் யார்? இதைத் தொடர்ந்து 4 குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றவாளிகளான வினய்சர்மா, அக்சய் தாக்கூர், பவான் குப்தா மற்றும் முகேஷ் ஆகியோர் மீதான இந்த வழக்கு கடந்த 9 மாதங்களாக நடைபெற்றது. பொலீஸ் தரப்பில் 85 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த 3- ந் தேதியுடன் விசாரணை முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி யோகேஷ் கன்னா அறிவித்திருந்தார். நேற்று பகல் 12.30 மணியளவில் தீர்ப்பை வாசித்த நீதிபதி 4 பேரும் குற்றவாளிகளே என்று அறிவித்தார்.

அத்துடன் இந்த 4 பேருக்குமான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது.

delhi

Published by

Leave a comment