ஊடகங்கள் பொய்யை எழுதத்கூடாது: ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீத்

hameed– இர்ஷாட் ரஹ்மதுல்லாஹ்

ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிராம மக்களின் குடிநிர் தேவையினை முதன்மைபடுத்தி விடுமுறை தினங்கள் உட்பட பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் இடம் பெறுவதாக ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.

ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த ஊடகச் செய்தியில் எவ்வித உண்மையுமில்லையென்று தெரிவித்துள்ள தவிசாளர் பிரதேச மக்களுக்கு நன்மை செய்கின்ற போது அவற்றை மழுங்கடித்த அம்மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் வேலையினை செய்வதை தாம் வண்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் –

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நாவலடி பிரதேசத்திற்குரிய கிராமங்களான ஹிஜ்ரா நகர், றஹ்மத் நகர், அறபா நகர், போன்ற கிராமங்களுக்கு தினந்தோறும் காலை முதல் மாலை வரை குடிநீர் விநியோகப் பணிகளை எமது சபை செய்துவருகின்றது. இதற்கென நிரந்தரமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதனை தொடராக மேற்பார்வை செய்யும் பணியினை நான் செய்து வருகின்றேன்.

மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக எவரும் எனது கவனத்திற்கு கொண்டுவராத நிலையில்,பிழையான தகவலின் அடிப்படையில் செய்திகளை வெளியிடவதானது ஊடக நிறுவனத்தின் நம்பிக்கையினை வாசகர்கள் இழக்கச் செய்யும் ஒன்றாகும்.
விசேடமாக மக்கள் அதிகம் நீரை பயன்படுத்தும் பகுதிகளை தனிப்பட்ட முறையில் அடையாளம் கண்டு அங்கு 1000 லீற்றர் நீர் கொள்ளக்கூடிய நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு அதில் மக்கள் நன்மை பெரும் நிலையில்,இந்த செய்தி வெளியிடப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து தாம் தமது சபையின் மாதாந்த அமர்வில் பேசவுள்ளதாகவும்.இது குறித்த உரிய ஊடக நிறுவனத்துக்கும் இந்த தீர்மாணம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.

hameed
ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீத்

Published by

Leave a comment