கிண்ணியா: நாடு முழுவதும் 2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்திற்கான வேலைத்திட்டங்கள் 2013.09.09 ஆம் திகதி தொடக்கம் 2013.09.15 ஆம் திகதிவரை உள்ளூராட்சி சபைகளில் செயற்படுத்தப்படவுள்ளது. இவ்வாரத்தினை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகரபிதா தெரிவித்துள்ளார்.
இவ்வுள்ளூராட்சி வார நிகழ்வில் 7 விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அதில் இன்று 9ஆம் திகதி நடமாடும் சேவை தினம் நிகழ்வாக இன்று கண் பரிசோதனை நிகழ்வு கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பொதுமக்களும், நகரசபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூராட்சி வாரத்தின் நிகழ்வுகளாக நாளை 10 ஆம் திகதி வருமான மேம்பாட்டு தினமாகவும், 11 ஆம் திகதி சுகாதார துப்பரவு ஏற்பாடு தினமாகவும்,12 ஆம் திகதி மக்கள் பயன்பாட்டு தினமாகவும், 13 ஆம் திகதி சுற்றாடலம் மரநடு தினமாகவும், 14 ஆம் திகதி கல்வி மற்றும் நூலக அபிவிருத்தி தினமாகவும், 15 ஆம் திகதி விளையாட்டு மற்றும் பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கும் தினமாகவும் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




Leave a comment