இவ்வாரம் வெளியாகிய வார உரைகல் பத்திரிகையின் செய்தி தவறானது – காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட் கண்டனம்

saji– ஊடகப்பிரிவு – முஹம்மட் பயாஸ்

காத்தான்குடி: காத்தான்குடியில் இருந்து வெளிவரும் வார உரைகள் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவியினால் 09.09.2013 இன்று வெளியாகிய இவ்வாரப் பத்திரிகையில் காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட்டின் முகாமையாளர் முஹம்மட் சஜியினை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட செய்தி மிகவும் தவறானது இதனை காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட் வண்மையாக கண்டிப்பதாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக…

‘இன்று வெளியாகிய வார உரைகல் பத்திரிகையில் பேசியதைப் பேசவில்லையெனப் பொய்யுரைத்த…

எனும் தலைப்பில் காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட்டின் முகாமையாளர் முஹம்மட் சஜியினை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட இப்பொய்யான செய்தி ஊடக தர்மத்தினையும் மனங்களுக்கிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தமையையிட்டு மிகவும் கவலையடைவதாக காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பாக மீடியா ப்ரெசன்ட்  சஜியிடம் கேட்டபோது…

இன்று வார உரைகல்லில் வெளியாகிய என்னை தொடர்புபடுத்திய செய்தியினைப் பார்க்க முடிந்தது. மிகவும் கவலை அடைந்தேன். அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மையாக இருந்தாலும் எவ்வித தொடர்புமில்லாத என்னை சம்பந்தப்படுத்தி எழுதியுள்ள இச்செய்திக்கு எனது கவலையை தெரிவிப்பதோடு எனது வண்மையான கண்டனத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேற்படி விடயம் தொடர்பான செய்தியில் அன்மையில் வாகரையில் ஜனாதிபதி பங்கேற்ற வைபவத்தில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் நான் பிரதிஅமைச்சரின் ஊடக செயலாளர் என்று குறிப்பிட்டு உற்சென்றதும் உண்மைதான். ஆனால் அங்கு ‘யார் வருகை தந்தார் வருகை தரவில்லை’ என்பது பற்றிய தகவலை வெளியிடவேண்டிய அவசியம் எனக்குகிடையாது.

பிரதம ஆசிரியர் புவி என்னுடைய ஊடக நண்பர் என்ற அடிப்படையில் இத்தகவலை என்னிடம் கேட்டு உறுதிப்படுத்தியபின் வெளியிட்டு இருக்க முடியும். அவருடைய அவசரத்தனம் காரணமாக இச்செய்தியினை வெளியிட்டு மனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தும் இச்செயற்பாடுகளை நிறுத்தி இதில் தொழில் ரீதியான பிளவுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாக ஊடகவியலாளரும் காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட்டின் முகாமையாளருமான முஹம்மட் சஜி குறிப்பிட்டார். 

saji

Published by

Leave a comment