டமஸ்கஸ்: நச்சுவாயுக்கள் அடங்கிய குண்டுகளை சிரியாவின் ஜனாதிபதி அஸாட் பஸரின் இராணுவம் உபயோகித்ததை தாங்கள் நிரூபிப்பதாக அமெரிக்காவும் அமெரிக்காவின் காலணித்துவ அரபு நாடுகளும் உறுதியாக தெரிவித்திருக்கின்றன. மறுமுனையில் இதனை முற்றாக மறுக்கும் கூட்டணியில் ரஷ்யாவும் ஈரானும் ஒருமித்து நிற்கின்றன.
இதற்கிடையில் அங்கு கொல்லப்படுவது அப்பாவி மக்கள் என்பது வேதனையான செய்தி!
ஆயுதங்களைக் கையாளும் உலக கட்டுப்பாட்டு விதிகளை சிரியா படை மீறிவிட்டதால் அங்கு போரைத் தொடங்குவதைத்தவிர, வேறு வழியில்லை என அமெரிக்காவும், அதன் காலணித்துவ அரபு நாடுகளும் ஒருமித்து குரல்கொடுத்து வருகின்றன.
மாறாக, சிரியாவுக்குள் காலடி எடுத்து வைத்தால் தாங்கள் தாக்குவோம் என சிரியா எச்சரித்துள்ளது.
இதுவழமையான யுத்த தந்திரங்களே தவிர, வேறொன்றுமில்லை.
இதே போல்தான முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூஸைனும் அவரது இராணுவத் தளபதிகளும் கூறியிருந்தனர்.
‘முடிந்தால் பக்தாத் பாலத்தை கடந்து பாருங்கள்’ என முன்னாள் ஈராக் இராணுவ அதிகாரி தாரீக் அஸீஸ் அமெரிக்காவுக்கு சவால் விடுத்திருந்தார்.
எவ்வித உயிர்ச்சேதங்களுமின்றி அமெரிக்க படைகள் பக்தாத் பாலத்தைக் கடந்து சதாமின் சிலையை உடைத்தெறிந்ததும், அமெரிக்காவுக்கு சவால்விட்ட தாரீக் அஸீஸ் அமெரிக்காவிடம் சரணடைந்திருந்ததும் வரலாறு.
சிரியாவைப் பொருத்தமட்டடில் அங்கும் இரு குழுக்கள் இருக்கின்றன. அஸாட்டின் ஆதரவாளர்களும், அவருக்கு எதிரானவர்களும் அங்கு இருக்கின்றனர்.
அமெரிக்காவும், அதனது காலணித்து அரபு நாடுகளும் சிரியா மக்களை மீட்க அஸாட் படையுடன் போராடப்போவதாக தெரிவித்து வருகின்றன.
சிரியாவைத் தாக்கினால் ரஷ்யாவும், ஈரானும் அஸாட் படைக்கு முழு உதவிகளையும் வழங்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கின்றன. தங்களது வலயங்களில் தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாங்களும் கண்காணிக்க தவறமாட்டோம் எனவும் ரஷ்யாவும், ஈரானும் அமெரிக்காவுக்கு தெரிவித்திருந்தன.
ஏனெனில் சிரியாவைக் கைப்பற்றினால் ஈராக்கின் ஊடாக ஈரானுக்குள் காலடி வைக்க முடியும். ஈராக் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கின்றது.
இதேபோல் பரந்த சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா உடைந்ததால், தனது வல்லரை தக்கவைத்துக் கொள்வதற்கு அதற்கு உதவி நாடுகள் தேவை. இதனால் எப்போதும் பகையான அமெரிக்காவை விட்டுவிட்டு, ஈரானோடு நட்புக்கொண்டு வருகின்றது.
இங்கு அரைவாசிக்கும் அதிகமான மக்கள் அஸாட்டின் ஆட்சியை எதிர்ப்பதாக தெரிய வருகிறது. இந்நிலையில் சிரியாவுக்குள் அமெரிக்கா நுழைவதற்கு அஸாட்டின் எதிர்பாளர்கள் உதவிபுரிவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோலதான் ஈராக்கும் முஸ்லிம்களின் பிளவால் வீழ்ந்தது. அமெரிக்காவின் கண்ணில் விரலைவிட்டுக் குடைந்து கொண்டிருக்கும் ஈரானைத் தவிர, அனைத்து அரபு நாடுகளும் அமெரிக்காவின் காலடியில் சுருண்டுவிட்டது.
இருப்பது ஈரானும் துருக்கியுமே!
துருக்கியில் மறைமுகமான மேலைத்தேய ஊடுறுவல்கள் ஏற்கனவே திட்டமிட்டு நடாத்தப்பட்டு வருவதால் அவர்களுக்கு துருக்கி ஓரு சவாலாக அமையாது. சிரியாவைக் கைப்பற்றினால் ஈரானை தரை, ஆகாய மார்க்கமாக மிக அருகில் இருந்து கண்காணிப்பதற்கும், தேவை ஏற்படின் தாக்குதல் மேற்கொள்ளவும் மிக ஏதுவாக அமெரிக்காவுக்கு அமையும்.
அதுமாத்திரமன்றி, அமெரிக்கா (சிரியா), இஸ்ரேல் ஆகிய இரு நிலப்பகுதிக்குள் ஈரான் கட்டுப்படுத்தப்படும். இதன் இலக்கு பாரிய சவால்களாக இருந்தாலும் மெதுமெதுவாக ஈரானை வீழ்த்த அமெரிக்காவும் அதன் காலணித்துவ அரபு நாடுகளும் வகுத்த திட்டம் நிறைவேறும்.
![Israel-Nbrs-Map[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/israel-nbrs-map1.jpg?w=120&h=116)
![Israel-Nbrs-Map[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/israel-nbrs-map1.jpg?w=780&h=755)
Leave a comment