கண்டி: நான் நாட்டின் தலைவனாக இருக்கும் வரை இந்த நாட்டைப் பிரிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதிகளால் முடியாமல் போனதை வேறு எவராலும் சாதிக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்த ஜனாதிபதி வடக்கில் வாக்குக் கேட்போர் நாட்டைப் பிரிக்கும் யோசனையுடன் கனவில் செயற்படுவது அவர்களது வங்குரோத்து நிலையையே காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆத ரிக்கும்
மாபெரும் மக்கள் பேரணி கூட்டம் கண்டி மாவட்டத்தில் கெங்கல்ல கொலொன்வத்த பிரதேச சபை மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமை யில் நடைபெற்றது.
பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன லக்ஷ்மன் செனவிரத்ன, சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரத்ன, பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வேட் பாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் வெற்றிகொள்வோம் என்ற தொனியில் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான இந்த முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
நாம் அங்கும் இங்கும் தாவுபவர்களல்ல. நாம் மஹிந்த சிந்தனை திட்டம் மூலம் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப் பியுள்ளோம் அத்தோடு தேசிய நல்லிணக் கத்தையும் கட்டியெழுப்பியுள்ளோம்.
வடக்கில் தேர்தல் நடத்த முடியுமென்று எவரும் நினைத்திருக்கவில்லை. எனினும் நாம் தேர்தல் நடத்துகின்றோம். வடக்கில் வாக்குக் கேட்பவர்கள் நாட்டைப் பிளவுபடுத்த ஆலோசனை முன்வைத்து வருகின்றனர். அவர்கள் எந்தளவு வங்கு ரோத்து நிலையில் உள்ளனரென்று இதிலிருந்து தெரிகிறது.
‘இந்த நாட்டைப் பிரிப்பதற்கு இந்தத் தலைவன் இருக்கும் வரை ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இங்கு எந்தபிள்ளை வந்து போனாலும் எதுவும் நடக்காது. பயங்கரவாதிகளால் முடியாமல் போனதை இப்போதுள்ளவர்களால் செய்ய முடியாது என்பதை நான் உறுதி யாகக் கூறுகின்றேன்.
வடக்கில் தேர்தல் நடத்துவது என்பது அரசாங்கத்துக்குக் கிடைத்த முதலாவது வெற்றியாகும். வடக்கில் எந்த தேர்தலையும் நடத்த முடியாது என்ற நிலையை நாம் மாற்றியிருக்கிறோம். கண்டிக்கு வந்து பயங்கரவாதிகள் தலதா மாளிகை மீது தாக்குதல் மேற்கொண்ட காலம் இருந்தது. அக்குறஸ்ஸவுக்குப் போய் குண்டு வைக்கச் செய்த யுகம் இருந்தது.
அந்தத் தாக்குதலில் அகப்பட்ட அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்னும் எழுந்திருக்க முடியாமலுள்ளார். இத்தகைய மோசமான யுகத்தையே நாம் கடந் துள்ளோம். இன்று சிலருக்கு அவை மறந்துவிட்டது’ என்றார்.
– தினகரன்
Leave a comment