தேசிய மற்றும் முதியோர் அடையாள அட்டை தொடர்பான நடமாடும் சேவை காத்தான்குயில்

-டீன் பைரூஸ்-

imagesகாத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டினில் தேசிய அடையான அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டைக்கான நடமாடும்  சேவை ஒன்று  எதிர் வரும் 11.09.2013 புதன்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.பகல் 04.00 மணி வரை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி நடைபெற உள்ள நடமாடும் சேவையின் போது பிரதானமாக நான்கு விடயங்களுக்கான எற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

1) தேசிய அடையாள அட்டைக்காக முதன்முறையாக விண்ணப்பித்தல்.

2) தேசிய அடையான அட்டையைப் புதிப்பித்தலுக்காக விண்ணப்பித்தல்.

3) தொலைந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல்.

4) முதியோர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல்.

தேசிய அடையாள அட்டைக்காக  விண்ணப்பித்தலின் போது பொலிஸ் முறைப்பாடு மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்படி செயலகத்தில் செய்யப்பட்டுள்ளது. எனினும் அவற்றைப் பெற்றுக் கொண்டு வருபவா்கள் விரைவாக சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் காத்தான்குடி பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப்  பெறமுடியும்.

Published by

Leave a comment