யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சகிதம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்புப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு இன்றைய தினம் (7) வருகை தந்த அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இச்சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இதன்போது வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a comment