மட்டக்களப்பு: அகில இலங்கை பாடசாலைமட்டங்களுக்கு இடையிலான தேசிய மட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் இவ் வருடம் முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்திலும், ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்திலும், சிவானந்தா விளையாட்டு மைதானத்திலும், இந்துக்கல்லுரி விளையாட்டு மைதானத்தில் 07.09.2013 தொடக்கம் 08.09.2013ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
9 மாகாணங்களில் இருந்தும் 27 மகளீர்இ ஆடவர் கிரிக்கட் அணிகளும்இ 83 பாடசாலைகளில் இருந்து 108 கரம் அணிகளும் கலந்து கொள்கின்றன முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடை பெறும் பாடசாலைமட்ட தேசிய போட்டிகளில் ஆரையம்பதி மகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் நடை பெற்ற ஆடவருக்கான கிரிக்கட் போட்டிகளை முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

Leave a comment