40 கோடி சீனர்களுக்கு அந்நாட்டு மொழி தெரியாது

chinaசங்கே: சீனாவில் 40 கோடி பேருக்கு அந்நாட்டின் அதிகாரபூர்வ மொழியான மேன்டரினை சரியாகப் பேசத் தெரியவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் அந்த மொழியை மோசமாகப் பேசுகின்றனர். அந்நாட்டில் பேசப்படும் ஆயிரக்கணக்கான வட்டார மொழிகளுக்கு இடையே தொடர்பாடல்களை மேற்கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட மேன்டரின் உருவாக்கப்பட்டது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் பேசப்படும் மேன்டரினே உலகில் அதிகம் பேர் பேசும் மொழியாக உள்ளது. மேன்டரினை பல ஆண்டுகளாக சீனாவையாளும் கம்யூனிஸ்டுகள் முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

எதிர்ப்பு

ஆனால் நாடு முழுதிலும் மேன்டரின் பேசப்படும் நிலை என்றுமே தோன்றாமல் போகலாம் என்று அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர். குறிப்பாக சிறுபான்மையினத்தினர் மென்டரின் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்க்கின்றனர். திபெத்திய பள்ளிக் கூடங்களில் மேன்டரின் உபயோகத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதே நேரம் பள்ளி கல்வியில் குறைந்த அளவே முதலீடுகள் செய்யப்படுவதால் மேன்டரினை முன்னெடுக்கும் அரசின் நடவடிக்கைகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

– BBC

Published by

Leave a comment