நீண்ட காலத்தின் பின்னர் யூனிஸ்கான் இரட்டைச்சதம்!

younisஹராரே: ஹராரே டெஸ்ட் போட்டியில் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் யூனிஸ்கானின் இரட்டை சதத்தினால் மீண்டுள்ளது. ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் முடிவில் பாகிஸ்தான் அணி 249 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 327 ஓட்டங்களும் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து  நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணியின் யூனிஸ்கான் அதிரடியாக விளையாடிய அணியின் ஸ்கோரை வலுவாக உயர்த்தினார்.

அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடிய மிஸ்பா உல் ஹக் அரைசதம் கடந்து 52 ஓட்டங்களும், அத்னன் அக்மல் 64 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 419 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டத்தை நிறுத்தியது. . சிறப்பாக விளையாடிய யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (200) கடந்தார்.

இதனையடுத்து 342 ஓட்டங்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 13 ஓட்டங்கள் எடுத்தது.

அண்மைக்காலமாக பிரகாசிக்கத்தவறி வந்த யூனிஸ்கானின் இந்த இரட்டைச்சதம் அவரது மீள்வருகைக்கு ஓர் வரவேற்பளிப்பதாக அமைகிறது. LS

younis

Published by

Leave a comment