செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை இந்தியா ஆதரிக்காது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டில் சிரியா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதற்காக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.
எந்த ஒரு நாட்டின் மீதுமான ராணுவ நடவடிக்கையால் மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியாது. சிரியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றார்.

Leave a comment