மோதரகமயையும் மரச்சிக்கட்டியையும் இணைக்கும் முசலி மரச்சிக்கட்டி பாலத்தின் வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகிறது – பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வை

L1100815முகம்மட் சஜி

மன்னார்: மன்னாரில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மஹிந்த சிந்தனையின் அபிவிருத்தியினூடாக பெருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியில் சுமார் ஒரு கோடி செலவில் மோதரகம ஆற்றையும் மரச்சிக்கட்டியையும் இணைக்கும் முசலி மரச்சிக்கட்டி பாலத்தின் வேலைகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். இவ்விஜயத்தில் முசலி பிரதேசசபைத் தவிசாளர் எம்.எம்.யஹியா, அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.ரியாஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.இப்பாலத்தின் வேலைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment