இவன்
தேவதைகளின்
தோட்டக்காரன் !
பட்டாம் பூசிகளின்
பாட்டுக்காரன் !
கண்சிமிட்டும் மின்மினிகளின்
காவல்காரன் !
கால்முளைத்த பூக்களின்
பாசக்காரன் !
அதுமட்டுமல்ல
இந்த உலகில்
அண்ணன்களோடு பிறந்த தங்கைகள் மட்டும்தான்
அதிஸ்ட்டக்காரிகள்
இல்லை இல்லை
அவர்கள் பாக்கியசாலிகள்
ஏன் என்றால்
அவர்களால் மட்டும்தானே
ஒரு வீட்டில்
இரண்டு அம்மா
இரண்டு அப்பாக்களோடு உயிர்வாழ முடிகிறது !

Leave a comment