பிரபாகரன் அடம் பிடித்ததால்தான் தனி ஈழத்தைப் பெற முடியவில்லை: இளங்கோவன்

ilankovan– OIT

சென்னை: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோடில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ. 48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது.

 

Published by

Leave a comment