‘நவி பிள்ளையிடம் பேசியவர்கள் மிரட்டப்படுகின்றனர்’

Stock-Market-Warning[1]கொழும்பு: இலங்கைக்கு விஜயம் செய்துவரும் ஐ நா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை அவர்களைச் சந்தித்து, கள நிலவரம் குறித்து எடுத்துக் கூறிய சிலர் மிரட்டப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. ஐ நா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று கொழும்பில் சந்தித்துப் பேசினர்.

அந்த சந்திப்பின் போது, திருகோணமலையில் நவி பிள்ளையை சந்தித்த இரு பாதிரிமார்கள் சிலர் விசாரிக்கப்பட்டதாக தாம் நவி பிள்ளையின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணை

பாதுகாப்பு செயலர் உள்ளிட்ட அரச தரப்பினர் பலரை சந்தித்துப் பேசுகையில் இந்த விடயத்தை நவி பிள்ளை எழுப்புவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

போர் குற்றம் தொடர்பிலும், காணமல்போனோர் தொடர்பிலும், இணக்கப்பாடு தொடர்பிலும் இலங்கைக்குள் நடைபெற்ற விசாரணைகள் போதுமான பலனைக் கொடுக்காத நிலையில், இந்த விடயங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

-BBC

Published by

Leave a comment