இருபது20 போட்டியில் நேற்றிரவு நிகழ்த்தப்பட்ட புதிய சாதனை

166149[1]-MJ

சவுத்தம்டன்: நேற்றிரவு இங்கிலாந்து, சவுத்தம்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக இடம்பெற்ற இங்கிலாந்து-அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச இருபது20 போட்டியில்  சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இருபது 20 சர்வதேச போட்டிகளில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக 156 பதிவாக இருக்கின்றது.

இச்சாதனைக்குச் சொந்தக்காரர் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ‘ஏரம் ஜேம்ஸ் பின்ச்’ எனும் இளம் வீரராவார்.

போட்டியில் தான் சந்தித்த முதலாவது பந்தை எல்லைக்கு வெளியில் அடித்து தனது ஓட்டத்தை ஆரம்பித்தார். இவர் 63 பந்துகளைச் சந்தித்து, பதினொரு 4 ஓட்டங்களையும், பதினான்கு 6 ஓட்டங்களையும் பெற்று இந்த 156 சாதனை ஓட்டத்தைப் பெற்றார்.

இதற்கு முன்னர் இருபது 20 சர்வதேசப் போட்டியொன்றில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டமாக நியூஸிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஓர் அணி பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்டமாக 248 ஓட்டங்கள் பதிவாகி இருக்கின்றது. இதற்கு முன்னர் 2007ம் ஆண்டில் கெண்யாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 260 ஓட்டங்களை 6 விக்கட் இழப்பிற்குப் பெற்றிருந்தது.இவ் ஓட்ட எண்ணிக்கையே ஓர் அணிபெற்ற அதிகூடிய ஓட்டமாகத் திகழ்கிறது.

இதைவிடவும் வேகமான சதத்தைப் பெறும் வாய்ப்பும் பின்ச்சிற்குக் கிடைத்தது. எனினும் அணியின் நிலை கருதி, அவர், 90 ஓட்டங்களின் பின்னர் மெதுவாக துடுப்பெடுத்தாடினார்.

166149[1]

Published by

Leave a comment