‘முஸ்லிம் சமூகத்தை பலவீணப்படுத்துவதற்காக சில முகவர்கள் இத் தேர்தலில் மாற்றுக் கட்சியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்’

yahyakan– ரிஸ்கான் முகமட்

கொழும்பு: பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில், முஸ்லிம்கள் எப்போதும் ஏனைய மக்களின் உணர்வுகளை மதித்து இந்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  மேலும் ஏனைய மதத்தவர்களுடன் ஒரு தாய் பிள்ளை போன்று   ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இதை விரும்பாத ஒரு சில தீய சக்திகள் மதத்தின் பெயரால் மக்களை  குழப்பி, இந்நாட்டை மீண்டும் ஓர் கொடூர இன மோதல்களை உண்டாக்கி இதன் மூலம் இந்நாட்டை மீண்டுமொரு யுத்த பூமியாக மாற்றுவதற்கு சில சதிகாரர்கள்  முயற்சிக்கின்றார்கள். என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளர் ஏ.சீ யஹியாகான் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்நாட்டிலே மிகவும் கொடூரமான உள்நாட்டு யுத்தம் முடிவுற்று  இங்கு வாழ்கின்ற அனைவரும் நல்ல முறையில் சமாதான காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கின்ற  வேளையில், இந் நாட்டில் வாழும் மக்களுக்கிடையில் பிளவுகளை, இன முறுகல்கள்,ஏற்படுத்தி இதில்  குளிர் காய்வதற்கு ஒரு சில தீய சக்திகள் இயங்கிக் கொண்டிருப்பதை காணமுடிகின்றது. இவர்களுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவதற்காக சில மாற்றுக்கட்சி முகவர்கள் நடைபெறவிருக்கின்ற மாகாண சபைத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்கள். 

மேலும் முஸ்லிம் சமூகத்தை பலவீணப்படுத்துவதற்காக சில சுயநல  முஸ்லிம் முகவர்கள் மாற்றுக் கட்சியில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொய்ப்பிரசாரங்கள், கட்டுக்கதைகள்  மூலம் மக்களை குழப்பி அவர்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றார்கள். ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் மிகவும் கவனமாக சிந்தித்து அவர்களுடைய பசப்பு வார்த்தைகளைக் கண்டு ஏமாறாது, அவர்களுடைய சமூக விரோத நடவடிக்கைகளுக்கு தகுந்த  பாடம் புகட்ட வேண்டிய தருணம் இதுவாகும் என்றார்.

தனது உள்வீட்டுப் பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாத ஐ.தே. கட்சி முஸ்லிம் மக்களின் மீது இரக்கம் காட்டுவது போன்று வெறும் அறிக்கைகளை ஊடகங்களுக்கு அனுப்பி அவற்றின் மூலம் முஸ்லிம்களை தங்களது பக்கத்திற்கு இழுத்துக் கொள்வதற்கு ஐ.தே.கட்சியும், அதன் முகவர்களும் பகல் கனவு காண்பது வேடிக்கையா இருக்கின்றது. மேலும் இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற  வாக்குகளால் எவ்வித பிரயோசனத்தையும் முஸ்லிம்கள் அடையப்போவதில்லை  என்றார்.
மேலும் ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், எமது தலைமையும் இந்நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக, ஒற்றுமையுடன் வாழவேண்டும், இது பல்லின மக்களின் தாயகப் பூமி என்பதில் மிகத்தெளிவாக இருக்கின்றது.  அத்துடன் இந்நாட்டு முஸ்லிம் மக்களின் விடயத்தில் மிகவும் அவதானத்துடனும், மிகப்பொறுப்புடனும் நடந்து கொள்கின்றது. எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மிக நுனுக்கமாக ஆராய்ந்து சரியான நேரத்தில் சரியான வேலைகளைக் செய்து கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் பங்காளியாக எமது கட்சி இருந்தாலும், கட்சியின் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அண்மைக்கால நிகழ்வுகளை கண்டுகொள்ளாத அரசாங்கத்தின் போக்கினை அழுத்தங்கள் மூலம் உணர்ததுவதற்காகவே தனித்துப் போட்டியிடுகின்றோம் இதன் வெற்றி சமூகத்தின் கைகளிலே இருக்கின்றது என்றார்.

மேலும் இந்நாட்டு முஸ்லிம்கள் தலை நிமிர்ந்த வாழ்வதற்கும், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், ஆன்மீக விடயங்களை பாதுகாப்பதற்காக காலத்தின் தேவையை உணர்ந்து பகைமைகளை மறந்து ஒன்றுபட்டு உழைப்பதன் மூலமே வெற்றிகளைப் பெற முடியும். ஆகவே சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்று எமது சமூகத்தை பலவீணப்படுத்தாமல், முஸ்லிம்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும், அதன் தலைமையையும் பலப்படுத்துவதன் ஊடாகத்தான் முஸ்லிம்கள் நிம்மதி காற்றினை சுவாசிக்க முடியும். ஆகவே நடைபெறவிருக்கின்ற மாகாண சபை தேர்தலில் அதிகமான வாக்குகளை ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு அளித்து  வெற்றிபெறச் செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இதை நன்குணர்ந்து செயலாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment