14 வயது சிறுவன் 110 வயது தோற்றத்தில்…

child– OiT

பாட்னா: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பார்ப்பதற்கு 110 வயது முதியவரைப் போன்று உள்ளார். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் நடித்த ‘பா’ படத்தில் அரிய வகை நோயால் சிறுவன் வயதானவரைப் போன்று தோற்றமளிப்பதைப் பார்த்துள்ளோம். அதே போன்று ஒரு சிறுவன் பீகாரில் உள்ளார்.

பீகாரைச் சேர்ந்தவர் நபி ஹுசைன் கான் (50). அவரது மனைவி ரசியா (46). உறவினர்களான இவர்களுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே ஆரோக்கியமாக பிறந்தன. அவர்களது மகன் அலி ஹுசைன் கான் (14) அரிய வகை நோயால் அவதிப்படுகிறார். இந்த நோயினால் அவரது உடல் வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமாக வயதாகுகிறது. இதே நோயால் அவரது உடன் பிறப்புகள் 5 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரோஜெரியா அல்லது ஹட்சின்சன்-கில்போர்ட் ப்ரோஜெரியா சின்ட்ரோம் ஒரு அரிய வகை மரபணு கோளாறு ஆகும். இந்த நோயுடன் பிறக்கும் குழந்தைகள் 15, 16 வயதில் அல்லது 20களில் இறந்துவிடுவார்கள். இந்த நோயை குணப்படுத்த இன்னும் சரியான மருந்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

child

Published by

Leave a comment