பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த காவற்துறை பிரித்தெடுக்கப்பட்டது ஏன்?

armyகொழும்பு: பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த காவற்துறை திணைக்களம் தனியாக பிரிக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் விசேட அதிரடிப்படை மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியன இந்த இரண்டு அமைச்சுக்களில் எந்த அமைச்சுகளில் கீழ் உள்ளது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

அரச புலனாய்வு சேவையின் தலைமை அதிகாரியான பிரதிக் காவற்துறை மா அதிபர் ஒருவர் பணியாற்றி வருகின்றார். அத்துடன் அதில் சேவையாற்றும் அதிகாரிகள் அனைவரும் காவற்துறை திணைக்களத்தின் அதிகாரிகளாவர்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் அரச புலனாய்வு சேவையின் பிரதிக்காவற்துறை மா அதிபரே பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பு கூறவேண்டுமா அல்லது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கு பொறுப்புக் கூறவேண்டுமா என்பது பற்றிய தெளிவின்மை காணப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவின் ஏனைய சேவைகளில் ஈடுபடாது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் பங்கேற்பதால், அரச புலனாய்வு சேவை பாதுகாப்பு அமைச்சின் கீழ்தான் வரும் என சில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை விசேட அதிரடிப்படை நேரடியாக காவற்துறை திணைக்களத்தின் கீழ் இயங்கி வருவதுடன் அதன் பொறுப்பதிகாரியாக பிரதிக்காவற்றை மா அதிபர் ஒருவரே பணியாற்றி வருகிறார்.

சில நாடுகளின் பாதுகாப்புச் செயலாளர்கள் அதிரடிப்படையினரை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செயற்படுத்துவதால், இலங்கையின் அதிரடிப்படையினர் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது சிக்கலுக்குரியதாக இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். jpc

Published by

Leave a comment