பதினாறு வருடங்களின் பின்னர் வெளிவரும் திடுக்கிடும் உண்மை: இளவரசி டயானா S.A.S. படையினரால் கொல்லப்பட்டார்!

diana– MJ

லண்டன்: 1997 ஓகஸ்ட் மாதத்தின் இறுதிநாள்-31ம் திகதி! பிரித்தானிய இளவரசியும் அவரது காதலர் அல் பய்ட் இருவரும் பிரான்ஸ் தலைநர், பாரிஸ் நகரில் அமைந்திருக்கும் ‘பொண்ட் டி இ’அல்மா’ சுரங்கத்துக்குள் கார் விபத்தில் கொல்லப்பட்டதாக அறியப்பட்ட நாள்.

இணையத்தள வளர்ச்சிகள் அப்போதுதான் ஆரம்ப கட்டத்தை தொட்டிருந்தன. இதனால் குறித்த சர்வதேச ஊடகங்களைத் தவிர, வேறு எந்த இணைய வலைமனை செய்தி ஊடகங்களும் அன்றிருக்கவில்லை.

டயானாவும், அவரது காதலரான எகிப்து வம்சாவளியான டோடி அல் பய்ட் மற்றும் சாரதி ஹென்றி போல் ஆகிய மூவரும் கொல்லப்பட்ட தகவல் உலகை அதிரவைத்தன. அல் பய்ட்டை உலகத்துக்குத் தெரியாவிட்டாலும், இளவரசி டயானாவைத் தெரியாதவர்கள் அன்றிருக்கவில்லை.

தனது திருமண வாழ்க்கையில் கனவர் இளவரசர் சார்ல்ஸூடன் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. இதனால் அரண்மனையைவிட்டு வெளியேற டயானா பல வருடங்களாகத் துடித்தார். இதனால், டயானாவுக்கு அனுதாபங்களும், ஆதரவுகளும்  எழ ஆரம்பித்திருந்தன.

எனினும் அரச அரண்மனையைவிட்டு வெளியேறுவதென்பது இலேசுபட்ட காரியமல்ல. எனவே பொதுத்தொண்டார்வ முயற்சியில் அரண்மனையைவிட்டு வெளியேற முடிவு செய்தார்.

diana

ஆங்கில கலாச்சாரங்களும், அரண்மனை வாழ்க்கையும் தனக்குள் சகப்பை ஏற்படுத்திவந்ததால், தனக்கான அமைதியைத் தேடி உலகை வலம் வந்தார்.

இதன்காரணமாக மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகளுக்கு தொண்டார்வ சேவை செய்வதற்காக தன்னை அர்ப்பணிக்க ஆரம்பித்தார். எயிட்ஸ் குழந்தைகளை முத்தமிட்டு, மனித நேயத்தை உலகுக்கு முதன்முதலாக வெளிக்காட்டினார்.

இக்காலப்பகுதியில் இம்ரான்-ஜெமீமா காதல் விகவாரங்கள் கொடிகட்டிப் பறந்தன. ஜெமீமாவும், டயானாவும் ஒன்றுவிட்ட சகோதரிகளாக இருந்தாலும் நண்பிகளாகவே பள்ளிவாழ்க்கை முதல் அரண்மணை வாழ்க்கைவரை பழகி வந்தனர்.

diana
மரணப்பாதையை நோக்கிய பயணத்திற்கு முன் பாரிஸ் ரிட்ச் ஹோட்டலில் இருந்து வெளியேறும் போது, CCTV கமெரா காட்சி

இதற்கிடையில் லண்டனில் புகழ்பெற்றிருந்த பாகிஸ்தானிய வைத்தியர் ஹஸ்னத் காண் என்பவருடன் டயானாவுக்கு பழகும் வாய்ப்புக்கிடைத்தது. காதல் மலர்ந்தது. திருமணம் செய்வதற்கு டயானா விருப்பம் தெரிவித்திருந்தார். இஸ்லாத்தை ஏற்று, இங்கிலாந்தில் இல்லாவிட்டாலும் பாகிஸ்தானில் வாழுவோம் என்று அன்போடு ஹஸ்னத் கானைக் கேட்டிருந்தார் டயானா.

எனினும் ஓர் இளவரசியை அதுவும் பிரித்தானிய இளவரசியை திருமணம் செய்தால் எதிர்கால வாழ்க்கையின் சிக்கல்களையும், ஆபத்துக்களையும் அறிந்திருந்த வைத்தியர் ஹஸ்னத் கான், டயானாவை விட்டு விலக ஆரம்பித்தார்.

இதன் பின்னரே செல்வந்தரான அல் பய்ட் உடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் மரணமாவதற்கு முன்னர் பாரிஸ் நகரில் உள்ள ரிட்ஸ் ஹோட்டலில் அன்றிரவைக் களித்தனர். அரச பரம்பரை சமாச்சாரங்கள் தெருக்களில் விற்கும் பொருட்கள் போன்று கசிந்ததால், ஊடகவியலாளர்கள் ரிட்ச் ஹோட்டலைச் சுற்றி காத்திருந்தனர்.

அன்றிரவு டயானாவும் அவரது காதலர் அல் பய்ட், சாரதி மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஆகிய நால்வரும் மேர்சிடிஸ் பென்ஸ் W-140 ல் பயணித்தனர்.

இவர்களுள் டயானா-டோடி ஆகியோரின் மெய்ப்பாதுகவலரான ‘ட்ரீவர் ரீஸ் ஜோன்’ மாத்திரம் குறித்த காரில் உயிர்தப்பியவர்.

diana
இலக்கு வைக்கப்படும் காட்சி

சம்பவம் இடம்பெற்ற குகைக்குள் டயானாவின் காரைப் பின்தொடர்ந்து ஓர் வெள்ளை நிறக்கார் வேகமாக துறத்தி வந்தது. இதற்கிடையில் நான்கு மர்ம உறுப்பினர்களைக் கொண்ட இரு மோட்டார் சைக்கிள்களும் இருகார்களுக்கிடையில் வேகமாக வந்தன.

டயானா-பய்ட் சென்ற காரை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த மர்ம உறுப்பினர், புகைப்படக் கருவிபோன்ற ஒரு பொருளில் லேசர் ஒளியை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த சாரதி மற்றும் மெய்ப்பாதுகாவர் ஆகியோரை நோக்கி பாய்ச்சுகின்றார்.

இந்த இலேசர் ஒளி பாய்ச்சப்பட்டதும், கண்ணில் ஏற்பட்ட எரிச்சல், மங்கள், மறைப்பு காரணமாக சாரதிக்கு மேற்கொண்டு காரை செழுத்த முடியாமல் வேகத்தைக் குறைக்க முயற்சித்தார், எனினும் அதி வேகமாக பின்னால் வந்த வெள்ளை நிறக்கார், டயானா-டோடி சென்ற காரை அதி வேகத்தில் முட்டித் தள்ளுகிறது.

பென்ஸ் W-140 சுரங்கத்தின் சுவர்களில் மோதி கட்டுப்பாட்டை இழக்க, கச்சிதமாக தப்பிச் செல்கின்றனர் மோட்டார் சைக்கிள் மர்ம நபர்கள்.

துப்பாக்கி கொண்டு கொலையை மேற்கொள்ளாமல், விபத்து போல் சுரங்கத்திற்குள் மூடி மறைக்கப்பட்ட டயானாவின் மர்மக் கொலை அன்று ஊடகங்களால் ஊகிக்க முடியாமல் இருந்தன.

சுரங்கப்பாதைக்குள் இருந்த இரகசிய கமெராவை பரிசோதித்த அன்றைய ஸ்கொட்லாண்டிய மற்றும், பிரான்ஸ் நாட்டின் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

princess-diana-and-dodi-last-hours-princess-diana-17083585-611-404[1]
ஊடகவியலாளர்களில் படப்பிடிப்பிலிருந்து தப்பிக்கும் போது, மரணத்திற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்…

அவற்றுள், ‘பத்திரிகையாளர்கள் புகைப்படம் பிடிக்க விரைந்து, டயானா-டோடி சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்து வருவதிலிருந்து தப்பிக்கும் முயற்சியில், அதி வேகமாக கார் சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டு மரணம் சம்பவிதத்தாக’ அன்று இவர்கள் அறிவித்திருந்தனர். நேற்றுவரைக்கும் ஊடகங்களும், மக்களும் இதையே நம்பி வந்தனர்.

‘எனினும் டயானாவும்-பய்ட்டும் விபத்தில் உயிர் இழக்கவில்லை! அவர்கள் எஸ்.ஏ.எஸ் – S.A.S. எனும் (Special Air Service)  பிரித்தானியாவின் விஷேட விமான சேவை படைப்பிரிவால் திட்டமிட்டு கொல்லப்பட்டனர்’ எனவும், ஓய்வு பெற்ற முன்னாள் பிரித்தானிய இராணுவ வீரர் ‘பொப் ஸ்டேர்லிங்’ திடுக்கிடும் உண்மையை உலகுக்கு தெரிவித்திருக்கின்றார்.

‘எஸ்.ஏ. எஸ் படையினரால் இளவரசி டயானா எவ்வாறு கொல்லப்பட்டார்?’ என்ற தலைப்பில் ஓர் நூலாக வெளியிட இருக்கின்றார் பொப் ஸ்டேர்லிங்.

இதனால் அரச குடும்பமும், பிரித்தானிய மக்களும் அதிர்ச்சியடைந்திருப்பதுடன், உலக மக்களை  பிரித்தானியாவின் பக்கம் திசைதிருப்பச் செய்திருக்கின்றது இவரது அறிக்கை.

தற்பொழுது ஸ்கொட்லாண்டியார்ட் பொலிஸார் மீள் விசாரணைக்காக களமிறங்கி இருக்கின்றனர். இதற்கிடையில் இளவரசி டயானா-பய்ட் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளிவந்திருப்பதால் மீள் மேன் முறையீட்டை இளவரசி டயானா சார்பாக அவரது மகன் இளவரசர் வில்லியம்ஸூம், பய்ட் சார்பாக அவரது தந்தை டோடியும் மேற்கொண்டிருக்கின்றனர்.

‘இது தெளிவான உண்மையே எனவும், மறைப்பதற்கோ மறுப்பதற்கோ எதுவும் இல்லை எனவும், சாரதி போலுக்கு, அறிமுகமில்லாத ஓர் அழகி பயணிப்பதற்கு முன்னர் அன்றிரவு அதிகமான மதுபானங்களை வழங்கினார். இது, ஓர் பிரித்தானிய சாரதி அருந்துவதைப் பாரக்கிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது’ எனவும் பொப் ஸ்டேர்லிங் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த லேசர் மூலமாக கண்ணைத் தாக்கும் கருவிகள் 1950களில் உலகளவில் நிறுத்தப்பட்டு வந்தன. இது 007 எனும் ஜேம்ஸ் பொண்ட் திரைப்படத்தின் கதைபோல் கச்சிதமாக காரியத்தை முடித்திருக்கின்றனர். இதில் வெற்றி என்னவென்றால் இலக்கு தவறவில்லை. இருவரைக் குறிவைக்க மூவர் இறையடி சென்றனர். மனித நேயத்தைப் பேணவேண்டிய பிரித்தானிய விமானப்படையின் இச்செயலை அறிந்து நான் வெட்கப்படுகிறேன் எனவும் பொப் கூறியுள்ளார்.

இளவரசி டயானா மற்றும் பய்ட் ஆகியோருக்கிடையில் ஓர் வாரிசு டயானாவின் வயிற்றில் வளர்ந்தது. ஆம் டயானா கொல்லப்படும்போது கர்ப்பினியாக இருந்தார். இதனையறிந்து, இருவரும் திருமணத்தை நிச்சயிக்க திகதி பார்திருந்தனர். பணம் முடிந்ததும் திருமணத்துக்கான திகதியை தேர்ந்தெடுப்போம் என இருவரும் கூறி இருந்தனர்.

620-PrincessDiana-022713-jpg_23244320130228101459[1]
ஆபிரிக்க வலது குறைந்த சிறுவர்களுடன்…

திட்டமிட்டு கொல்லப்பட்ட இளவரசி டயானா, ஓர் முஸ்லிமாக மாறுவதற்கும், இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கும் அதிக ஆர்வமுள்ளவராய் இருந்தார். தன் தலையை மறைப்பதிலும் பின்னர் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

டயானா இஸ்லாத்தைத் தழுவிவிடுவாரோ என பக்கிங்ஹம் அரண்மனை அன்று நடுங்கியது. எனினும் இங்கிலாந்து மக்கள் டயானாவுக்கு பின்புலத்தில் இருந்து வந்தனர். டயானா இஸ்லாத்தை தன் செய்கைகளில் மறைமுகமாக பின்பற்றுவதைக் கண்ட  பல்லாயிரக்கணக்கான ஆங்கிலயர்கள் அன்று குர்ஆனை ஆராய தொடங்கினர்.

இறைவன் மாத்திரமே அறிந்தவன் அவர் இறக்கும்போது இஸ்லாத்தை ஏற்றிருந்தாரா என்று!

Published by

Leave a comment