மின்ஸ்க்: மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பெலாரஸ் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) மின்ஸ்க் நகரில் இலங்கை கலைஞர்கள் நடாத்திய கலாசார நிகழ்வில் கலந்துகொண்டார். இலங்கையின் சம்பிரதாய நடனங்களைக் கொண்ட ‘இலங்கை இரவு” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை பெலாரஸ் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
பெலாரஸ் பிரதி பிரதமர் எனடோலி டொசிக்- கலாசார அமைச்சர் பொரிஸ் ஸ்வெட்லோ- இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோரும் இந்த கலாசார நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-GA
![lankan-night-1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/lankan-night-11.jpg?w=675&h=437)
Leave a comment