கொழும்பு: 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக 305 கோடி ரூபா செலவு செய்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என தேசிய பிக்கு முன்னணி தெரிவித்துள்ளது. நாட்டின் தனி நபர் கடன் சுமார் நான்கு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையிலும் ஜனாதிபதிக்காக இந்த பெரும் தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தினியாவல பாலித தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக 550 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் தவறுகள் பற்றிய தேடிக்கொண்டிருக்கும் எவரும் இந்த தவறு பற்றி எதனையும் பேசுவதில்லை.
2006 ஆம் ஆண்டில் மட்டும் ஜனாதிபதியின் செலவுகளுக்காக 129 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டில் ஒரு 10 லட்சம், 2008 ஆம் ஆண்டில் 90 கோடி, 2009 ஆம் ஆண்டில் 17 கோடி, 2010 ஆம் ஆண்டில் 20 கோடி, 2011 ஆம் ஆண்டில் 47 கோடிக்கும் மேல் பணம் செலவு செய்யப்பட்டு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதியிடம் ஒரு கோடியே 52 லட்சம் பொறுமதியான வீட்டு தளப்பாடங்கள் இருந்தன. தற்போது 157 கோடிக்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த வீட்டுப் பாவனை பொருட்கள் இருக்கின்றன.
ஜனாதிபதிக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய செலவிட்ட பணத்தை பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்களை இறக்குமதி செய்திருந்தால், அதன் தரத்தை மூன்று மடங்காக உயர்த்தியிருக்கலாம் என்றார்.tw
Leave a comment