கொழும்பு: பம்பலப்பிட்டி ஊடகவியலாளரின் வீட்டில் இனந்தெரியாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அட்டூழியங்கள் வெறும் கொள்ளைச் சம்பவமேயென பொலிஸ் தலைமையகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேற்படி கும்பலிலிருந்த ஐவரும் கொள்ளையர்களென்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதனால், இவர்கள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் வரவில்லை யென்பது ஊர்ஜிதமாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
மிலாகிரிய டிக்மன்ஸ் வீதியிலுள்ள பெண் ஊடகவியலாளரின் வீட்டை முற்றுகையிட்ட குறித்த கும்பல் வேறு நோக்கத்திற்காக வந்திருப்பார்களாயின் சுமார் 2 மணித்தியாலங்கள் வரை அதே வீட்டில் தங்கியிருந்து நகை மற்றும் பணத்தினை தேடிக் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியமில்லையெனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொள்ளையர்க்கு எதிராக அவிசாவளை நீதிமன்றம் ஏற்கனவே நான்கு பிடிவிறாந்துகளை பிறப்பித்திருப்பது ஆரம்ப விசாரணைகளடிப்படையில் தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வருள் ஒருவருக்கெதிராக 08 பிடிவிறாந்துகளையும் மற்றுமொருவருக் கெதிராக 02 பிடி விறாந்துகளையும் அவிசாவளை நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ளது. மேலும் இவர்களுள் இருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் களெனவும் தெரிய வந்துள்ளது. இவற்றையடிப்படையாக வைத்து பார்க்கையில் குறித்த பெண் ஊடகவியலாளரின் வீட்டிற்குள் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இந்தக் கும்பல் வந்துள்ளதென்பதை திட்டவட்டமாக கூற முடியுமெனவும் பொலிஸ பேச்சாளர் தெரிவித்தார்.
இச் சம்பவம் சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது. கத்திகள் மற்றும் கைக்குண்டுகளை தம் வசம் கொண்டிருந்த கும்பலே இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. சம்பவத்தை தொடர்ந்து வீட்டார் 119 க்கு அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பொலிஸாருக்கும் கொள்ளைக்கும்பலுக் குமிடையே ஏற்பட்ட கடும் மோதலையடு த்தே கொள்ளையர்களில் ஒருவர் பலியா னதுடன் ஏனைய நான்கு கொள்ளையர் களும் மூன்று பொலிஸாரும் காயங்க ளுக்குள்ளான நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ், கொழும்பு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
– தினகரன்
Leave a comment