ஆங்கில பிரிமியர் லீக்: மன்செஸ்டர் யுனைட்டட் – செல்சி இன்று பலப் பரீட்சையில்!

Manchester-Uniteds-Wayne--007[1]– MJ

ஓல்ட் ட்ரப்போர்ட்: இவ்வருடத்துக்கான ஆங்கில-பார்கிலேய்ஸ் பிரிமியர் லீக் கடந்த வார இறுதியில் ஆரம்பமானது. இன்று இரவு 8 மணிக்கு மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை எதிர்த்து செல்சி கழகம் மோதவிருக்கின்றது. ஓல்ட் ட்ரப்போர்ட், மன்செஸ்டர் யுனைட்டட் மைதானத்தில் இடம்பெறும் இம்முக்கிய போட்டி, உலகளவில் பல பில்லியன் கணக்கான மக்கள் நேரடி ஓளிபரப்பின் மூலம் காண இருக்கின்றனர்.

76,000 பார்வையாளர்களைக் கொள்ளளவாகக் கொண்ட இம்மைதானம், இப்போட்டிக்காக தற்பொழுது தயாராகி வருகின்றது.

மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முன்னணி வீரர் ரூனியை, செல்சிக்கு உள்வாங்குவதற்கான போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நிலையில், இப்போட்டி உலகளவில் ஓர் முக்கிய போட்டியாக கருதப்படும்.

rooney

Published by

Leave a comment