5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் பாதுகாப்பாகவும், மாணவர்களின் பரீட்சை ஆர்வத்தையும் உறுதி செய்வனவாக அமைந்தது – எம்.எம்.சியான்

Examஇர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார்: இன்று இடம் பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் பாதுகாப்பாகவும், மாணவர்களின் பரீட்சை ஆர்வத்தையும் உறுதி செய்வனவாக அமைந்ததாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்துள்ளதுடன், இந்த பரீட்சையினை சிற்நத முறையில் நடத்தி முடிப்பதற்கு பரீட்சை திணைக்களம் உயர்ந்த ஒத்துழைப்பினை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் இன்று ஆரம்பமான புலமைப் பரிசில் பரீட்சையில் 1600 மாணவர்கள் தோற்றினர். விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மெற்கொள்ளப்பட்ட நிலையில் மிகவும் அமைதியாக பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றியதாகவும் பணிப்பாளர் எம். எம். சியான் கூறினார். பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு தினத்திற்கு முன்னர் பரீட்சை வினாத்தாள்கள் உரிய மண்டபங்களுக்கு அனுப்பப்பட்டதுடன் அதனை பாதுகாக்கவும், கண்காணிப்பு பணிகளுக்குமாகவும் விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். 

அதே மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச மீள்குடியேற்ற கிராமங்களில் அடிப்படை வசதிகளில்லாத போதும் மாணவர்களின் கற்றலுக்கான வளங்கள் குறைவாக காணப்பட்ட போதும், மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் வருகைத்தந்து புலமைப்பரிசில் பரீட்சையினை உரிய முறையில் எழுதியதாகவும் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எம். எம். சியான் மேலும் கூறினார். 

Published by

Leave a comment