28 ஆண்களுக்கும் 10 பெண்களுக்குமாக 38 பேருக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு மத்தியஸ்த்த சபையில் மத்தியஸ்த்த சபை உறுப்பினர்கள் நியமனம் வழங்கி வைப்பு

???????????????????????????????பழுலுல்லாஹ் பர்ஹான்

மண்முனை: மட்டக்களப்பு மண்முனை வடக்கு மத்தியஸ்த்த சபை அங்குரார்ப்பண நிகழ்வும் மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு மத்திய சபையின் புதிய தவிசாளர் எஸ்.விஷ்ணுமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி கனகா சிவபாதசுந்தரம் கௌரவ அதிதிகளான மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் சார்பில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.ஜெயந்த ரத்நாயக்க ,மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு மத்திய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இதன் போது மட்டக்களப்பு மத்தியஸ்த்த சபையில் 01-08-2013 திகதி தொடக்கம் ஏதிர்வரும் மூன்றாண்டுகள் கடமையாற்றுவதற்கான தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் உட்பட 38 மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

நீதி அமைச்சினால் நியமனம் செய்யபட்டு அனுப்பப்பட்ட 38 மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களில் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment