-டீன் பைரூஸ்-
காத்தான்குடி யங்ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் பரீட் பௌண்டேஸன் ஏற்பாடு செய்த அணிக்கு 11 பேர் கொண்ட(10 over) மென்பந்து கிரி்க்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி (25.08.2013 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி விக்டரி மைதானத்தில் நடை பெற்றது.
மேற்படி போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ்.KLM பரீட் JP ,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் MCM றம்ழான் JP, காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் காத்தானகுடி சியாட் பௌண்டேஸனின் தலைவருமான அல்ஹாஜ் MSM சியாட் JP உட்பட பல அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எட்டு கழகங்கள் பங்கு பற்றிய மேற்படி போட்யின் போது இறுதிச் சுற்றுக்கு காத்தான்குடி அக்ரம் விளையாட்டுக் கழகம் ,மற்றும் ரெஸ்ட்ரோ லங்கா வி.கழகம் தெரிவாகி பலப் பரீட்சை நடாத்தின. இதில் காத்தான்குடி அக்ரம் வி.கழகம் 3 விக்கட் இழப்பிற்கு 9 ஓவா்களுக்கு 82 ரன்களை குவித்து வெற்றி யினை தனதாக்கிக் கொண்டன.
முதலாம் இடத்தினை அடைந்த காத்தான்குடி அக்ரம் வி.கழகத்திற்கு மிகவும் பெறுமதி மிக்க சுமார் 4 அடி உயரமுடைய வெற்றி கேடயம் பிரதம அதிகளில் ஒருவரான அல்ஹாஜ்.KLM பரீட் JP அவர்களினால் பல நுாற்றுக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி போட்டியின் போது முழுநேர வர்ணணையாளர்களாக றிஸாலா FM அறிவிப்பாளர் சகோதரா் M-அல்சான்/ மற்றும் பிரபல வர்ணணையாளர் AM-அம்ஜத் ஆகியோர் கடமையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Leave a comment