லண்டன்: கர்ப்பமான காலம் தொட்டு, இளவரசன் ஜோர்ஜ் பிறந்த பிறகும் வந்து குவியும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளால் திணறிப் போயுள்ளனர் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட். வந்து குவியும் பரிசுகளை என்ன செய்வது எனத் தெரியாமல் அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்னர்.
இந்த வேலைகளைப் பொறுப்புடன் செய்வதற்காகவே தனி பிரிவுகளையும் பணியாளர்களையும் நியமித்துள்னர். அவர்களின் பணி நன்றிக் கடிதத்துடன் சம்பந்தப் பட்டவர்களுக்கு பரிசுப் பொருட்களைத் திருப்பி அனுப்புவதே ஆகும்.
வந்து குவிந்துள்ள பரிசுகளில் வகைவகையான துணிமணிகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பரிசுகள் ஒருபக்கமும், மற்றொரு பக்கம் உலக நாடுகளில் உள்ள பிரபல சுற்றுலா சொகுசு விடுதிகளில் தங்குவதற்கான அழைப்புகள் போன்றவை அடக்கம்.
அதுபோக, ரோல்ஸ், ரோய்ஸ், அவ்டிபோன்ற பிரபல கார் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை அனுப்புவதாக அறிவித்துள்ளன.
திருப்பி அனுப்புவதற்கான தபால் கட்டணம் அதிகமாகும் பட்சத்தில் அந்த பரிசுப் பொருட்கள் இங்கிலாந்தில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
பரிசுப் பொருட்கள் தவிர, இளவரசர் பிறந்ததற்கு வாழ்த்து செய்திகளை அனுப்பிய அன்பர்களுக்கும் வில்லியம்-கேட் தம்பதியர் நன்றி தெரிவித்து கடிதங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment