சமூக நலன் பேணும் அமைப்பின் மனித நேயம் பேணும் முதலாவது இரத்ததான முகாம்

DSC08948பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: Movement For Social Wellness எனும் சமூக நலன் பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி தஜ்வீத் கலாசாலையில் சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் கஸ்தூரியினால் பரிசோதிக்கப்பட்ட 100க்குப் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

சமூக நலன் பேணும் அமைப்பின் முதலாவது இரத்ததான முகாமில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் ,இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இவ் சமூக நலன் பேணும் அமைப்பில் 60 உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment